Header Ads



வட்சப் பதிவு தொடர்பில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்


- இஸ்மதுல் றஹுமான் -

   இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு அனுப்பிய வட்சப் ஒலிப்பதிவு தொடர்பாக  சிறி லங்கா சுதந்திர கட்சி புத்தளம் மாவட்ட நிரைவேற்றுக் குழு கண்டனத் தீர்மாணமொன்றை நிறைவேற்றியுள்ளது.

   இது தொடர்பாக புத்தளம் மாவட்ட நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் சிலாபம் பிரதி மேயர் சட்டதரணி சாதிகுல் அமீன் கூறுகையில்,

சனத் நிசாந்தவின் குரல் பதிவில்  சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் ஆனமடுவ அமைப்பாளர் ஆனந்த சரத் குமாரவின் வேண்டுகோளுக்கினங்க வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கியமைக்கே நிமல் லான்சாவை சாடியுள்ளார். 

இது இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியை புறக்கணிக்கும் செயலாகும். இதனால் நாம் புத்தளம் மாவட்ட நிறைவேற்றுக் குழு அதன் தலைவர் முன்னால் அமைச்சர் ஜயதிசிரித்த திசேரா தலைமையில் கூடி இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்து கண்டனத் தீர்மானமொன்றை நிரைவேற்றினோம் என்றார். 

இத் தீர்மானத்தை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, முன்னால் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர்களுக்கு அனுப்பிவைத்துள்ளோம் என சாதிகுல் அமீன் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.