Header Ads



ஹிந்துக்கல்லூரியொன்றுக்கு முஸ்லிம் ஆசிரியையை அரசு அனுப்புகின்றதென்றால் அதன் அர்த்தம் அபாயாவும் அணியலாம் என்பதுதான் ஐயா


சம்பந்தன் ஐயா அவர்களுக்கு

பணிவான வணக்கங்கள்.

உங்கள் ஆரோக்கியத்துக்கு பிரார்த்தித்தவனாக

ஐயா

கனத்த மனதுடன் இதை எழுதுகிறேன்

திருமலை சண்முகா ஹிந்துக்கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணியக்கூடாது என்ற நிலைப்பாட்டை அன்று நீங்கள் அங்கீகரித்ததன் விளைவை நேற்று நீங்கள் கண்டு இருப்பீர்கள்

அல்லது அறிந்து இருப்பீர்கள்.

வயதால் கூடி மனதால் குறுகிய உங்கள் வழிகாட்டல் உங்களை தலைவராக ஏற்ற மக்களை சகிப்புத்தன்மை அற்றவர்களாக வரலாற்றில் கூனிக்குறுக வைத்து விட்டது.

சர்வதேச மட்டங்களுக்கு சென்று மனித உரிமைக்காக கோசம் எழுப்பும் தகுதி இனிமேலும் தங்களுக்கு உள்ளதென நான் நம்பவில்லை.

நாட்டின் உயர் சட்டமான அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை ஆர்ப்பாட்டம் செய்து மறுதலிக்கும் முறட்டு சிந்தனையை தூண்டியதில் உங்கள் கருத்தியல் வழிகாட்டல் முதன்மையானது.

களத்தில் வேண்டுமாயின் கயவர்கள் சிலர் நின்றிருக்கலாம்

நேற்றைய அசிங்கமான சம்பவத்துக்கான முழுப்பொறுப்பையும் நீங்களே ஏற்கவேண்டும்.

ஹிந்துக்கல்லூரியொன்றுக்கு முஸ்லிம் ஆசிரியையை அரசு அனுப்புகின்றதென்றால் அதன் அர்த்தம்; அபாயாவும் அணியலாம் என்பதுதான் ஐயா.

எங்களில் சாறி அணியும் ஆசிரியைகளும் உண்டு.

சண்முகா கல்லூரியில் சாரி மட்டும்தான் அணிய வேண்டும் என்று  அங்கீகரிக்கப்பட்ட சட்டமிருந்தால் கல்வியமைச்சு அபாயா அணிபவரை அங்கு அனுப்பிருக்க கூடாது.

ஆயின், சண்முகா கல்லூரி நிர்வாகம் கல்வி அமைச்சுக்கு சென்றே ஆர்பாட்டம் செய்திருக்க வேண்டும்

அதை விடுத்து அப்பாவி ஆசிரியையிடம் காவாலித்தனம் காட்டியிருக்க தேவையில்லை.

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி செய்யப்பட்ட கல்வி அமைச்சின் மீள் நியமனத்தை சவாலுக்குள்ளாகாக்கும் அதிகாரத்தை கழுத்தை நெரித்த கயவனுக்குவழங்கியது யார் ?

அவன்மீது கொலை ஏத்தனிப்பு குற்றம் சாட்டடப்படவேண்டும்!

அன்னிய நாட்டு ஆடைகளுக்கு அனுமதி இல்லையென்றால் வேஷ்டியைதானே ஆசிரியர்கள் அணிய வேண்டும்.

லோங்கிசை உரிய வேண்டும்

உள்ளங்கியையும் சேர்த்து.

அவை ஆங்கிலேயனுடையது.

ஐயா,

நேற்றைய கசப்பான சம்பவத்தோடு வியாழேந்திரன் போன்ற தரம் கெட்டவரை  பிணைத்து பலர் பேசினாலும் சண்முகாவில் அபாயாவுக்கு அனுமதியில்லை என்று கடந்த வருடமே நீங்கள் நச்சை விதைத்து விட்டீர்கள்.

என்னைப்பொறுத்தவரை இந்த அடாவடித்னத்துக்கான முழுப்பொறுப்பையும்  நீங்களே ஏற்கவேண்டும்.

அதுதான் தர்மம்

இதைவிட காரமான சொற்களால் இந்த கடிதத்தை எழுத நினைத்தாலும் தங்கள் வயதின் மீதான மரியாதை நிமித்தம் தவிர்ந்து கொண்டேன்

நன்றி ஐயா.

வஃபா பாறுக்

7 comments:

  1. வயதானாலும் இனத்துவேஷம் இவரை விட்டு இன்னும் போகவில்லை

    ReplyDelete
  2. காலத்துக்கு ஏற்ற கருத்துப் பதிவு
    ; இந்துவுக்கு அப்பா அம்மா முஸ்லிமுக்கு வாப்பா உம்மா ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

    ReplyDelete
  3. டம்மள்ள (Dambula) வில் பழைமைவாந்த பள்ளிவாசலை சிங்களவர்கள் இடித்துதள்ளுகிறார்களாம். அதற்கு ஆமாம் ஐயா போடுகிறீங்கள்.
    ஆனால், ஒரு தமிழ் பாடசாலையின் ஆசிரியர்களின் உடை ஒழுங்கு விதிகளை எதிர்த்து போராடுகறீங்கள்.

    இடம் கண்ட இடத்தில் மடம் கட்டுற ஆக்கள் தானே.

    ReplyDelete
  4. Furkanhaj says:அருமை....அருமை...

    ReplyDelete
  5. If Sampanthan says that way, then why you need to call him Sir. Just call him by name just sampanthan not sampanthan sir.

    ReplyDelete
  6. If Sampanthan says that way, then why you need to call him Sir. Just call him by name just sampanthan not sampanthan sir.

    ReplyDelete

Powered by Blogger.