நாட்டின் தற்போதை நிலையை அம்பலப்படுத்தும் கம்மன்பில - அரசாங்கத்தில் பலர் பொய் கூறுவதாகவும் தெரிவிப்பு
இலங்கை வரலாற்றில் என்றுமே எதிர்நோக்காத நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பலர் இந்த நெருக்கடியை அடையாளம் காணவில்லை. நெருக்கடியை அடையாளம் காணாது அதற்கு தீர்வு காண முடியாது.
கோவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி என பலர் கூறுகின்றனர். இது உலக நெருக்கடி என்கின்றனர். இது பொய். இலங்கை வரையறைகள் இன்றி கடனை பெற்றதே இந்த நெருக்கடிக்கு காரணம். கடன் பொருளாதாரம்.
நாம் வரலாறு முழுவதும் கடனை பெற்று செலவிட்ட இனம். உழைத்து செலவிடுவதற்கு பதிலாக கடனை பெற்று செலவிடும் கலாசாரத்தை நாம் 1950 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுத்து வருகின்றோம்.
தற்போது மேலதிக கடனை பெற முடியாத அளவுக்கு கடன் பொறியில் சிக்கியுள்ளோம். இந்த நெருக்கடி முழு நாட்டு மக்களும் சிக்கியுள்ளனர். இதனால், அதிகமாக பயிரிடுங்கள். உருவாக்கங்களுக்கான உந்துலை ஏற்படுத்த வேண்டும்.
இந்த முன்னுதாரணத்தை பேச்சில் அல்ல அரசியல் தலைவர்கள் செயலில் காட்ட வேண்டும். பெருந்தொகையான எரிபொருளை விரயமாக்கி சுதந்திர தின வைபவம் போன்ற அரச நிகழ்வுகளை நடத்துவது தவறு. அப்படியான வைபவங்களை நடத்த வேண்டாம் என நான் அமைச்சரவையில் கோரினேன்.
எனினும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment