Header Ads



பங்களாதேசிடம் டொலர்களை பிச்சை எடுத்த இலங்கை, தற்போது கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது


ந்தியாவுக்கு விஜயம் செய்யும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்நாட்டிடம் இருந்து அதிக கடனை பெறுவது குறித்தும் கவனம் செலுத்துவார் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, நேற்று (06) தெரிவித்தார்.

கொழும்பில் (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர், தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது, தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்றும் அரச வருமானம் குறைந்து வரும் நிலையில், அரச செலவுகள் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் அமெரிக்க டொலர்களை இலங்கை பிச்சை எடுத்ததாகவும் தற்போது கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டில் அரச வருமானம் 1,980 பில்லியன் ரூபாயாக இருந்தது என்று குறிப்பிட  அவர், ஆட்சிக்கு வந்தவுடன் 600 பில்லியன் ரூபாய் வரிகளை குறைத்த விதத்தையும் நினைவு கூர்ந்தார்

எவ்வாறாயினும், வருமானத்தை விட தற்போது அரச செலவினம் மூன்று மடங்கு அதிகம் என்றும் இவ்வாறான வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை உள்ள நாட்டின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அரிசியை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை விமர்சித்த அவர், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி மூலம் மக்களுக்கு விஷம் ஊட்டப்படுவதாக குறிப்பிட்டார்.

அரசாங்கம், சரியானதைச் செய்வதைப் பற்றி அறிவுரை கூறுவதாகவும் ஆனால் அவர்களே அவ்வாறு செய்யத் தவறியுள்ளமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.