Header Ads



உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலை என்ன..?


உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் உக்ரைனிலுள்ள தமது நாட்டு பிரஜைகளை நாடு திரும்புமாறு அறிவித்துள்ளன.

இந்த நிலையில், உக்ரைனில் தற்போது 42 இலங்கையர்கள் வசித்து வருவதாகவும், அவர்களில் 7 பேர் மாணவர்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.

மேலும், இவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வருவதாகவும், உக்ரைனிலுள்ள இலங்கையர் தொடர்பில் மிகுந்து அவதானத்துடன் செயற்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

உக்ரைனில் இலங்கை தூதரகமொன்று இல்லாத நிலையில், துருக்கியிலுள்ள தூதரகத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் கூறுகின்றது.

இதேவேளை, உக்ரைனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள இலங்கையர்களை  வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது. 

No comments

Powered by Blogger.