Header Ads



பொத்துவில் ஜுமுஆ மஸ்ஜிதில் சகவாழ்வை கட்டியெழுப்புவது தொடர்பாக கலந்துரையாடல்


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டத்தின் ஜம்இய்யாவின் கிளை உறுப்பினர்களுடனான சந்திப்பு பெப்ரவரி 20 மற்றும் 21  ஆம் திகதிகளில் நடைபெற்றது.

சுகாதார வழிமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஜம்இய்யாவின் கிளை பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது தலைமையக செயற்பாடுகள், கிளைகள் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள், தாய் நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஐக்கியத்திற்கும் பங்காளிகளாக மாறி சகவாழ்வை கட்டியெழுப்புவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பொத்துவில் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவ தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்களுக்கு  நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

அதே நேரம் ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலீல், ஜம்இய்யாவின் உப தலைவரும் பன்னூல் ஆசிரியருமான அஷ்-ஷைக் உமர்தீன் மற்றும் பொத்துவில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ. ஆதம் லெப்பை ஷர்கி ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொத்துவில் கிளையினால்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

நன்றி

ஏ.எஸ். முஹம்மத் மஹ்பூப், 

செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொத்துவில் கிளை




No comments

Powered by Blogger.