'ஹபாயா' சர்ச்சை பற்றிய உண்மைத்தன்மை சரிவர தெரியாமையினாலேயே நான் பேசாமல் இருந்தேன்
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இரா.சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று(சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள 'ஹபாயா' சர்ச்சை பற்றிய உண்மைத்தன்மை குறித்து சரிவர தெரியாமையினாலேயே நான் அதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்தேன்.
எனினும் எனது பெயரினை பயன்படுத்தி சில விசமிகள் இனங்களுக்கிடையில் பிரிவினையினை வெளியிடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதன்காரணமாகவே நான் தற்போது இதுகுறித்து சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன்.
இது குறித்து சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், பெரும் சர்ச்சையாகியுள்ள ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தினை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை கைவிட வேண்டும்.
இவ்வாறான பிரச்சனைகள் இரு சமூக இணைப்பாட்டுடன் தீர விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.’ எனத்தெரித்துள்ளார்.
இதற்கும் கற்பனைக்குதிரையைத் தட்டிவிடலாமே. வாக்குப்பெட்டி வந்து கண்முன் நிற்கிறது போல்.
ReplyDeleteஇது இனவாதக் குட்டையைக்கிழப்பி கூதல் காயும் காலமல்ல, அவ்வாறு விசமிகள் திட்டமிட்டால் அது அந்தக் குழுவின் அழிவின் ஆரம்பம். பாடசாலையில் எந்த ஆசிரியைக்கும், ஆசிரியருக்கும் மரியாதையான ஆடையணிந்து வருவதில் என்ன தவறிருக்கின்றது. முஸ்லிம் பெண் ஆசிரியைகள் அவர்களின் கலாசார ஆடையை அணிந்து வருவதில் என்ன தவறிருக்கின்றது.நாடு ஏற்கனவே அழிவை நோக்கி மிக வேகமாக முன்னேறிச் செல்கின்றது அந்த அழிவுக்கு எண்ணெய் ஊற்றி கூதல் காய முயற்சி செய்யும் துவேச சமூக விரோதக்கூட்டத்துக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மக்களும் சேர்ந்து அரசை வலியுறுத்த வேண்டும்.துரதிருஷ்டவசமாக தற்போது இலங்கையில் அரசாங்கம் என ஒன்று இருக்கின்றதா என பொதுமக்கள் கேட்கின்றனர்.
ReplyDeleteநீதி மன்றம் தீர்ப்பளித்தாலும் கூட ஹபாயாவுடன் வருவதை அணுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் ஒரு அரசுப் பள்ளி பற்றிய உங்களின் கருத்து மிகுந்த வேதைனையைத் தருகின்றது.
ReplyDeleteVera level hypocrite. Tamils time and again prove that the merge of North and East will never be successful.
ReplyDeleteVera level hypocrite. Tamils time and again prove that the merge of North and East will never be successful.
ReplyDeleteThat psycho mental diseased principal should be arrested, because of violation against court order and oppression of fundamental rights. Shanmuga is a government school, not her own private school no?
ReplyDeleteIntha latshanaththula vada-killakku inayanum Muslims support pannanum???????????????????????????????????
ReplyDelete