Header Ads



இந்தியா, சீனா, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதால் பிரச்சினையை தீர்க்க முடியாது


தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை எவரும் புரிந்து கொள்ளவில்லையென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

அது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்லவென அவர் கொழும்பில் இன்று (6) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக காணப்பட்ட இந்த பொருளாதார பிரச்சினை எதிர்வரும் 5 ஆண்டுகளில் பாரியளவில் வெளிப்படவிருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காரணமாக முன்னதாகவே வெளிப்பட்டு விட்டது. 

வருடமொன்றில் ஏற்றுமதி வருமானத்திற்கும், இறக்குமதி செலவீனத்திற்கும் இடையில் 8 பில்லியன் அமெரிக்க டொலர் இடைவெளியுள்ளது. 

எனவே, இந்தியா, சீனா, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து குறுகிய காலத்திற்கு கடன் பெறுவதால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா- சீனாவிடம் கடன் பெறுவதை தவிர இலங்கைக்கு வேறுவழி அறவே இல்லை

    அதன் பின்னர், அரைவாசி நாடு சீனாவின் காலணியாகவும், மறுபாதி இந்தியாவின் புதிய மாணிலமாகவும் ஆகப்போவது உறுதி.

    இலங்கையின் பொருளாதார பிரச்சணைக்கும் தீராத இனப்பிரச்சணைக்கும் மிகச்சிறந்த ஒரே தீர்வு இதுவே ஆகும்

    ReplyDelete
  2. கம்மன்பில மந்தி(ரி) ஆச்சரியமான நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் பயன்படும் ஒ்ரு பிரபாண்டமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.