இஸ்ரேலுடனான தனது பங்காளித்துவத்தை மேலும் முன்னேற்ற, இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார் பீரிஸ்
இலங்கைக்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், 2022 பெப்ரவரி 03, வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர், இஸ்ரேலுடனான தனது பங்காளித்துவத்தை மேலும் முன்னேற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளினதும் நலனுக்காக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் வலியுறுத்தினார்.
எந்தவிதமான கொள்கையோ வாழ்வின் இலக்கும் இல்லாத மந்தி(ரி) வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இஸ்ரவேலுக்கும் கைநீட்டி பிச்சை வாங்க ஆரம்பித்துவிட்டார். இந்த நாட்டு மக்களுக்கு உலகில் எங்காவது ஏதாவது மரியாதை கௌரவம் கிடைக்குமா?
ReplyDelete