சஜித்த்தை ஜனாதிபதியாக்க ஐ.ம.ச. வகுத்துள்ள "ஜனபவுர" திட்டம் - திஸ்ஸ அத்தநாயக்க
தேர்தலை முகம் கொடுக்க கீழ் மட்டத்தில் இருந்து ஆயத்தமாக இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க நீர்கொழும்பில் ஐமச கட்சி செயட்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது கூறினார்.
நீர்கொழும்பு தொகுதி ஐமச அமைப்பாளர் காவிந்த ஜரவர்தன எம்.பி. தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் முகம் கொடுப்பதற்கு எத்தனையோ தேர்தல்கள் உள்ளன. உள்ளுராட்சி மன்ற தேர்தல் பின் போடப்பட்டுள்ளது. மாகாணசபை தேர்தலை நடாத்தாமல் தவிர்கின்றனர். இவை இந்தவருடம் நடாத்தவேண்டிய தேர்தல்கள். 2023ல் ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்ற தேர்தலை நடாத்தலாம். 2023 ஏப்ரலுக்குப் பின் ஜனாதிபதி விருப்பத்தில் ஜனாதிபதி தேர்தலையும் நடாத்தலாம். இது தேர்தல்களை எதிர்பார்திருக்கும் காலமாகும். இப்போதிருந்தே நாம் கீழ் மட்டத்தில் இருந்து ஆயத்தமாக வேண்டும். மக்கள் அலை எம்பக்கம் உள்ளதனால் வெற்றிபெறுவதை விட கீழ் மட்டத்தில் இருந்து ஆரம்பித்து கிளைகள்,மகளிர் அமைப்பு,இளைஞர் அமைப்பு என்பவற்றை அமைப்பு ரீதியாக பலப்படுத்தி உண்மையான வெற்றியை நோக்கிச் செல்லவேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 12 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் "ஜனபவுர" வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
8 ஆயிரம் வாக்குச்சாவடிகளை வெற்றிகொள்ளவேண்டும்.ஜனாதிபதி தேர்தலில் 75 இலட்சம் வாக்குகளை பெறவேண்டும். இதற்காக வாக்குச்சாவடி மட்டத்தில் சந்திப்புகளை நடாத்தி வாக்குகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஜனபவுர வேலைத்திட்டம் இரு மாதங்களில் மக்கள் மயப்படுத்தப்படும். இந்த வருட இறுதியாகும்போது எந்தவொரு தேசிய தேர்தலையும் வெற்றிபெற முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தவேண்டும்.
இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக வேலை செய்யும் ஊழியர்களின் பணத்தில் கைவைத்துள்ளனர். 2பில்லியனுக்கு மேல் வருமானமுள்ள வியாபாரிகளிடமிருந்து ஒருதடவை அறவிடும் 25 வீதி வரி விதிப்பதாக பஜட்டில் கூறப்பட்டது. அதனை தற்போது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, ஓய்வூதிய நிதியம் எனபவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ள வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஊழியர்கள் தாம் வேலைசெய்து சேமித்த பணத்தை நாட்டு பிரஜைகளுக்கு செலவழிக்கப் போகிறிர்கள்.
ஒரு இலட்சம் வேலைதிட்டத்தை பசில் ஆரம்பித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக இதனை ஆரம்பித்தால் பரவாயில்லை. ஆனால் தமது ஆதரவாளர்களுக்கு பூச்சாண்டி ,மீன்குஞ்சுகள், பூக்கன்றுகள் வழங்கவே பணத்தை வீனாக்குகிறார்கள்.
நாடு இன்று உள்ள நிலமையில் நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய கொள்கைத் திட்டமொன்றை வகுக்க சகல வேறுபாடுகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு சஜித் தலைமையில் ஒன்றுபட்டு செயல்பட முன்வரவேண்டும் என்றார்.
Post a Comment