Header Ads



சமுதித்த மீதான தாக்குதலை, முஸ்லிம் மீடியா போரம் கண்டிக்கிறது

ஹிரு தொலைக்காட்சியின் "பத்திரிகைக் கண்ணோட்டம் மற்றும் சலகுன" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல சுதந்திர ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது கடந்த 2022 பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்  ன்மையாக கண்டிக்கின்றது.

ஊடகவியலாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு தடைகளாக அமையும் அச்சுறுத்தல் அடக்குமுறை, வன்முறைத் தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது  என்றும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தேiவாயன நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வலியுறுத்துகிறது.

 நாட்டுக்குள் ஊடக சுதந்திரத்தை உருவாக்கும் கருத்துக்களை வெளியிடும் உரிமைக்கு உத்தரவாதமளித்து, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசு உடன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளுடன் ஊடகப் பணியை மேற்கொள்வதற்கான சூழல் இலங்கைக்குள்  இருக்க வேண்டும் என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதன் பிறகு இத் தாக்குதல் தொடர்பாக முறையாக விசாரணை நடாத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதும், எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக தம் கடமைகளைச் செய்வதனை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு என்றும் முஸ்லிம் மீடியா போரம் தெரிவிக்கின்றது

என். எம். அமீன்

தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

No comments

Powered by Blogger.