Header Ads



அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அரசியலை தூக்கி எறிந்துவிட்டு சுகாதார பணிப்பகிஷ்கரிப்பினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் தீர்மானம் எடுங்கள்


சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் தேசிய குற்றத்துக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன, நோயாளர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

பல சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வேலைநிறுத்தத்தை தேசிய குற்றமாக விளக்கி அரச சேவையை தனியார் மயமாக்கும் காலம் வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எரிவாயு நெருக்கடி, மின்சார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் போன்ற தொடர் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் சுகாதார சீர்கேட்டினால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழயர்கள் கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்த மாதம் மீண்டும் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளமை வேலைநிறுத்தப் பாணியாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும் ஆகிவிட்டது என்றார்.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அரசியலை தூக்கி எறிந்துவிட்டு அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி, சுகாதார பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.