Header Ads



1000 ஆண்டுகளுக்கு மேலாக ஹிஜாபை கடைபிடித்து வரும் இஸ்லாமிய பெண்கள்


- சங்கை ரிதுவான் -

மாணவிகள் ஆரம்பம் முதலே ஹிஜாப் அணிந்து வருகின்றனர்.

பாஜகவின் மதவெறி அரசியலுக்கு பலியாகி மாணவர்கள் காவி துண்டு அணிந்து வருகின்றனர்.

பள்ளி நிர்வாகம் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மாணவிகளின் மதம் சார்ந்த அடிப்படை உரிமை என்பதை நிலைநாட்டாமல் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தடை விதிக்கிறது.

கர்நாடகா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மத ரீதியிலான ஆடைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என்கிறார்.

மாணவிகள் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்கிறார்கள்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநபர் பென்ச்...

முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று கூறி வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுகிறது.

அந்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் இஸ்லாமிய பெண் நீதிபதி...

மூவரும் இடைக்கால தீர்ப்பளிக்கிறார்கள்.

அதில் பள்ளியின் சீறுடைக்கு தடை விதிக்க முடியாது என்கிறார்கள்.

பள்ளியின் சீறுடைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவிகள் வழக்கு தொடர்ந்தார்களா ? இல்லையே!

மாணவிகள் சீறுடையை ஏற்றுக்கொண்டார்கள். ஆரம்பம் முதலே சீறுடையை மாணவிகள் அணிந்தே வருகிறார்கள்.

தலைமுடி, கழுத்து, நெஞ்சுப்பகுதியை மறைக்கும் விதமாக முக்காடு அணிந்தார்கள்.

அந்த முக்காடு அணிவதற்கு தான் பள்ளி நிர்வாம் சட்டத்துக்கு புறம்பாக தடை விதித்தது. சட்டத்தை நிலைநாட்டக்கோரி மாணவிகள் நீதிமன்றம் சென்றார்கள்.

நீதிமன்றம் சம்பந்தமே இல்லாமல் சீறுடையை தடை செய்ய மாட்டோம் என்கிறது.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக முழுமையான தீர்ப்பு வரும் வரை கல்லூரியில் மதம் சார்ந்த எந்த அடையாளமும் மாணவர்கள் கடைபிடிக்க கூடாது என்று தீர்ப்பு கூறுகிறது.

இதற்கு பெயர் தீர்ப்பா ?

ஒருவன் 10 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிக்கிறான். திடீரென ஒரு ரவுடி அந்த வீட்டில் அத்துமீறி நுழைந்து எனக்கும் வீட்டில் பங்கு இருக்கிறது என்கிறான். வழக்கு நீதிமன்றம் செல்கிறது.

10 வருடமாக வாடகை செலுத்தி குடியிருப்பவனை வீட்டில் வசிக்க சொல்லிவிட்டு திடீரென வந்த ரவுடியை வெளியில் அனுப்ப தீர்ப்பு சொல்லாமல் முழுமையான தீர்ப்பு வரும்வரை இருவருமே வீட்டை விட்டு வெளியில் செல்லுங்கள் என்றால் இதற்கு பெயர் தீர்ப்பா ?

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை கடைபிடித்து வருகிறார்கள்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்ட்டிக்கல் 25 அந்த உரிமையை வழங்கியுள்ளது.

சட்டப்படி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளிடம் மதவெறி அரசியலுக்காக திடீரென காவி துண்டு அணிந்தவர்களுக்கு தடை விதிக்காமல் காலங்காலமாக பின்பற்றி வரும் இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் அணியக்கூடாது என்றால் நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டே வருகிறது.

முதல் தவறை பள்ளி நிர்வாகம் செய்கிறது.

இரண்டாவது தவறை பள்ளிக்கல்வித்துறை செய்கிறது.

மூன்றாவது தவறை கர்நாடகா உயர்நீதிமன்றம் செய்கிறது.

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் குரல்வளை மீண்டும் மீண்டும் நெறிக்கப்பட்டால் அதன் எதிர்விளைவுகள் எப்படி அமையுமோ இறைவனே அறிந்தவன்

No comments

Powered by Blogger.