Header Ads



அமைச்சர்கள் சிலர் என்னைத் தாக்கினார்கள், எனக்கும் பதில் தாக்குதல் நடத்த முடியும் - நிமல் லான்சா (வீடியோ)


என்னை நிந்தனை அவதூறு செய்தவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், எனக்கு தற்போதும் பதில் தாக்குதல் சிறப்பாக நடத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை 23 ஆம் திகதி நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

''கடந்த காலத்தில் எனது அமைச்சில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக இந்த சபையில் கூற வேண்டியது எனது கடமை என நான் நினைக்கின்றேன். ஜனாதிபதிக்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்பினேன். அவர் இது தொடர்பாக நல்ல முறையில் ஒரு தீர்மானம் எடுப்பாரென்று நான் எதிர்பார்க்கின்றேன்.

ஆகவே நான் கடிதத்தில் குறிப்பிட்ட அந்த காரணங்கள் தொடர்பாக நாடாளுமன்றில் விளக்கிக் கூறவேண்டிய தேவை இல்லை. நாடாளுமன்றில் நான் அதை கூறினாலும் அதற்குத் தீர்வு காண இங்கு யாருக்கும் முடியாது.

அது ஜனாதிபதியால் மாத்திரமே முடியும். அதனால் நான் ஜனாதிபதிக்கு மாத்திரம் கடிதத்தைக் கொடுத்துள்ளேன். சம்பவம் இடம்பெற்றும் நான் எந்தவொரு கருத்தையும் வெளியில் தெரிவிக்கவில்லை. நான் அமைதியாகவே இருந்தேன்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருக்குமாறு என் மக்கள் எனக்கு கூறினார்கள். அதனால் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் நான் பார்த்தேன் எமது கூட்டத்திலேயே சில அமைச்சர்கள் என்னை தாக்கத் தொடங்கினார்கள்.

எனக்கும் முடியும் பதில் தாக்குதல் நடத்துவதற்கு. ஆனால் அப்படி பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என என் அறிவார்ந்த மக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். இந்த சபையில் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நாட்டை ஆண்ட அனைவரும் பொறுப்பு கூற வேண்டும். அதனால் வேலைத்திட்டம் ஒன்றைக் கொண்டு வருவோம். என்னை நிந்தனை அவதூறு செய்தவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், எனக்கு தற்போதும் பதில் தாக்குதல் சிறப்பாக நடத்த முடியும்.

ஆனால் நான் அந்த நிலைக்குச் செல்லமாட்டேன். பதில் தாக்குதல் மிகக் கடினமானதாகவே அமையலாம். ஆகவே என்னைத் தக்க யாரும் முயற்சிக்காதீர்கள்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.