Header Ads



மின் நெருக்கடிக்குப் பின் சதி உள்ளது, மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என கூறுகின்றோம்


கேஸ் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக     என்று சொன்னேன்.அப்போது நிறைய பேர் என்னை  விமர்சித்தார்கள். இப்போது கேஸ் வெடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? முகநூலில் உள்ள அனைத்து ஜே.வி.பிகாரர்களும் என்னைக் குற்றம் சாட்டத் தொடங்கினர். கெட்ட வார்த்தையில்  அவர்கள்  என்னை ஏசினார்கள். முகநூல் ஊடாக ஜேவிபியின் ஒழுக்கத்தை நீங்கள் நன்றாகக் கவனிக்கலாம். மின்சாரத்திலும் இதே போன்ற பிரச்சினை உள்ளது. மாதக்கணக்கில் மூடப்படுகிறது. இந்த மின் நெருக்கடிக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்பதை மக்கள் உணரவில்லையா? இதன் பின்னணியில் சதி உள்ளது. ஜனாதிபதியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இடமளிப்பதில்லை . இந்த விடயங்களுக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது.   கேஸ் வெடிப்பு விவகாரம் வெளியில் வந்தது போன்று இந்த விடயங்களும் எதிர்காலத்தில் வெளிச்சத்துக்கு வரும். நமது ஜனாதிபதி  இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறார் . பொலிஸார் சாமர்த்தியமாக அவற்றையெல்லாம் பறை சாற்றாமல் அம்பலப்படுத்துவர். இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என தொழிற்சங்கங்களுக்கு கூறுகின்றோம்.  இதன் பின்னணியில் முழுமையாக சூழ்ச்சி காணப்படுகிறது. நாங்கள் தேர்தலை எதிர்கொண்டு மக்களின் விருப்பத்திற்கு இடமளிப்போம். மக்களை கொன்று பிணங்களை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்காதீர்கள்.  மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள்.  அவை தவறான செயல்களாகும் என ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்

நாடளாவிய ரீதியில் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கி அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும்   வரவுசெலவுத் திட்ட ஒரு இலட்சம் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அண்மையில் நிக்கவெரட்டியவில் நடைபெற்றது. குருநாகல் மாவட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அமைச்சர்.........

தேர்தல் வரும்போது இந்த பேச்சுக்கள் எல்லாம் குறையும். ஏனெனில் தேர்தல் இல்லாததால் இவ்வாறு தற்பெருமை  அடிக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார்கள். கோத்தபாயவுடன் சஜித் பிரதமராவார்  என்றார்கள். தேர்தல் முடிவுகள் வெளிவர மூன்று நாட்கள் பிடிக்கும் என்றார்கள்.இப்படி நிறைய விஷயங்களை சொன்னார்கள்.       இருப்பினும், தேர்தல் முடிவுகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். என்னை எவ்வளவு தான் தாக்கினாலும் அதனை எதிர்கொள்ளும் வலிமை எங்களிடம் உள்ளது. சில குறைபாடுகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து முன்னேறும் திறன் நமது அரசுக்கு உள்ளது. எங்களை எளிதில் வீழ்த்த முடியாது.

தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்தவர்தான் பெல்லன்வில கோவிலில் வெடிகுண்டு வைத்தவர். ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்தும் அதே மனிதர் தான். குண்டு வெடித்திருந்தால் தேசிய பாதுகாப்பு பற்றி கோத்தபாய பேசுவதில் பயனில்லை என்பார்கள். போலீசாரை பயன்படுத்தி இது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி பணித்திருந்தார்.   யாரையும் தப்பிக்க விடாதீர்கள் என்று   ஜனாதிபதி கூறினார். இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் சரியாகப் பார்க்க வேண்டும். அரசு வெடிகுண்டுகளை வைத்ததாக வதந்தி பரவியது. ஹிஜாஸை விடுவிக்க ஐ.நா ஆனால் ஐநா வெளியிட்ட அறிக்கை தவறானது என்று யாரும் கூறவில்லை. இந்த விஷயங்களை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கர்தினாலை ஹரன் பெர்னாண்டோ   அவதூறாகப் பேசினார். இறுதியாக சஜித் பிரேமதாச அவரை தேவாலயத்திற்குள் அழைத்துச் சென்று மன்னிப்புக் கோரினார். இந்த விஷயங்களை நாம் இன்னும் பொறுப்புடன் பார்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இல்லாவிடின் கொலையாளிகளும் எதிரிகளும் தப்பித்து விடுவார்கள் . அந்த வெடிகுண்டு வெடித்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி நாட்டுக்கே பெரும் அவமானம். அதுமட்டுமின்றி நாட்டில் எத்தனை உயிர்கள் பறிபோகும். அந்த விஷயங்கள் குறித்த உண்மை வெளிவருகிறது. பொலிஸார் சரியாகச் செயற்பட்டு  உண்மையான குற்றவாளிகளைத் தண்டிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்க்கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பவர்களும் உள்ளனர். இன்றும் திரு.பிரேமதாச அது தவறு என்கிறார். அவற்றை கண்டுபிடித்ததற்காக அவர் பாராட்டவில்லை. இந்த சதிகளால் எப்படி வெற்றி பெறுவது என்று பார்ப்போம்.

ஊடகப் பிரிவு 

நெடுஞ்சாலைகள் அமைச்சு

1 comment:

  1. அமெரிக்க ஜனாதிபதி புஷ் நாட்டில் நடக்கும் அனைத்து குறைபாடுகளையும் பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டிய போது ஒவ்வொன்றுக்கும் பின்லேடன் தான் காரணம் என்று கூறிக்கொண்டு வந்திருக்கின்றார். ஒரு பத்திரிகையாளன் புஷ்ஷிடம் தங்களின் மனைவி கற்பமடைந்துள்ளாராமே? என்று கேட்டுள்ளார் அதற்கும் பின்லேடன் தான் காரணம் என்றாராம்.

    ReplyDelete

Powered by Blogger.