Header Ads



கொரோனா ஜனா­ஸாக்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு


கொரோனா தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை நல்­ல­டக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகர் மைய­வா­டியில் நேற்று புதன்கிழமை வரை 3503 உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நௌபர் தெரி­வித்தார்.

நாட்டில் கொரோனா பரவல் குறை­வ­டைந்­தி­ருந்த காலத்தில் இங்கு அடக்கம் செய்­யப்­படும் ஜனா­ஸாக்­களின் எண்­ணிக்­கை­யிலும் குறை­வேற்­பட்­டி­ருந்­தது. இதன்­போது நாளொன்­றுக்கு 2 முதல் 4 வரை­யான ஜனா­ஸாக்­களே அடக்கம் செய்­யப்­பட்­டன. எனினும் தற்­போது நாளொன்­றிற்கு பத்­துக்கும் மேற்­பட்ட உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

அந்­த­வ­கையில், செவ்­வாய்க்­கி­ழமை 11 உடல்­க­ளும் நேற்று புதன்கிழமையன்று 17 உடல்களும் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டன. இந்நிலையில் கடந்த 9 நாட்­களில் மாத்­திரம் அங்கு 74 உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இங்கு முஸ்­லிம்­க­ளது ஜனா­ஸாக்கள் மாத்­தி­ர­மன்றி ஏனைய இனத்தவர்களினதும் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருவதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.-Vidivelli

(எச்.எம்.எம்.பர்ஸான்)


No comments

Powered by Blogger.