Header Ads



மீன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வயிற்றில் இருந்த விசித்திரப் பொருட்கள் (வீடியோ)


மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒருவர் கொள்வனவு செய்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து ஊசி மருந்து செலுத்தும் சிரின்ஜ்,(syringe) பிளாஸ்டிக் உட்பட பல பொருட்கள் காணப்பட்டமை தொடர்பான

 சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மீன்களில் இருந்து துர்நற்றம் வீசியதால், மீனை வெட்டுவதை காணொளியில் பதிவு செய்ததாக இந்த மீனை உணவுக்காக கொள்வனவு செய்த மட்டக்களப்பை சேர்ந்தவர் கூறியுள்ளார்.

மீனின் வயிற்றில் இருந்து உலோக பொருட்கள், சிரின்ஜ் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்படுவது காணொளி காட்சியில் காணப்படுகிறது.

இப்படியான ஆரோக்கியமற்ற மீன்களை உணவுக்கு எடுப்பதால், பொது மக்கள் புற்று நோய் போன்ற பல நோய்களுக்கு ஆளாகி வருவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் முகாமையாளர் டோர்னி பிரதீப் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உட்பட மக்காத பொருட்கள் பாதுகாப்பின்றி, கடல் உட்பட சுற்றாடலுக்குள் வீசப்படுவதால், மீன்கள், வன விலங்குகள் உட்பட பல உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

அத்துடன் கோழி, மீன்பிடி, இறைச்சி போன்றவற்றை உணவுக்கு பயன்படுத்தும் மனிதர்களும் இதன் மூலம் பல உடல் நல தீங்குகள் ஏற்படுவதுடன் நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். BBC

No comments

Powered by Blogger.