Header Ads



பைவர் மூலம் சிறிய அலங்கார படகுகளை உருவாக்கல்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

அரசாங்கத்தினால் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் மூலம் பைவர் மூலம் சிறிய படகுகளை உருவாக்கி வரும் எனக்கு தொழிலை விருத்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவி வழக்க வேண்டும் என்று ஓட்டமாவடியைச் சேர்ந்த ஹாயாத்து முஹமது நிஜாம் (வயது 42) என்பவர் தெரிவித்தார்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த ஹாயாத்து முஹமது நிஜாம் (வயது 42) என்பவர் 22 வருடமாக பைவர் தொழில் செய்து வருகிறார். தனது தந்தை பைவர் தொழில் செய்து வந்தார். அதனூடாகவே நான் இத்தொழிலை செய்து வருகின்றேன். பைவர் தொழில் செய்து வரும் நிலையில் பைவர் மூலம் சிறிய படகுகளை உருவாக்கி அதனை மக்கள் தங்களது வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் அழகுப் பொருட்களாக வைப்பதற்கு எற்ற வகையில் செய்கின்றேன்

நான்கு நாட்கள் பதினையாயிரம் ரூபாய் மூலதனம் மூலம் நான்கு பேர் உதவியாளர்களாக கொண்டு சிறிய அலங்கார படகினை செய்து வருகின்றேன். இதனை விற்பனை செய்வதாயின் கூலி எல்லாம் சேர்த்து இருபத்தையாயிரம் ரூபாய் எடுக்க வேண்டும். ஆனால் நான் இப்போதைக்கு இருபதாயிரம் ரூபாய் பெறுவதற்கு முயற்சி செய்கின்றேன்.

தற்போது நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் பைவர் விலையும் அதிகமாக உள்ளது. எனவே எனக்கு அரசாங்கத்தினாலோ அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலமோ ஏதும் உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் ஏதுவாக இருக்கும். அத்தோடு அமைப்புக்கள் அல்லது தனி நபர்கள் உதவி வழங்கினால் அவர்களோடு இணைந்து செயற்பட தயாராக உள்ளேன்.

நான் எனது தொழில் காலத்தில் முப்பது இளைஞர்களுக்கு தொழிலிலை பழக்கி உள்ளேன். அரசாங்கத்தினால் ஏதும் உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் என்னால் பல இளைஞர்களுக்கு வைபர் தொழில் பயிற்சி வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க உதவியாக இருக்கும்.

எனவே அரசாங்கத்தினால் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் மூலம் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கி வரும் நிலையில் எனது சுயதொழிலை விருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் எனக்கு உதவியினை வழங்கி உதவுமாறு வேண்டுகின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.