அதிகாரம் இல்லாவிட்டாலும் தேசத்துக்கான, சேவையை நான் மேற்கொண்டு வருகிறேன் - எதிர்க்கட்சித் தலைவர்
கம்பஹா அகரகம வைத்தியசாலையில் இன்று (04) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய வைத்தியசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
அதிகாரம் இல்லாமல் ஆட்சியில் இருந்தாலும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்காக புதிய சிந்தனையுடன் புதிய பாதையில் நவீனத்துவ ரீதியான தேசத்துக்கான சேவையை தான் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 41 ஆவது கட்டமாக,பதினைந்து இலட்சத்து என்பத்தி ஒன்பது ஆயிரம் ரூபா
(ரூ.1,589,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் அகரகம பிரதேச வைத்தியசாலைக்கு இன்று(04) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இதன் பிரகாரம்,
•ரூபா.295,000 பெறுமதியான Multipara Monitor இயந்திரங்கள் மூன்றும்,
•ரூபா 21,000 பெறுமதியான Stethoscope இயந்திரம் ஓன்றும்,
•ரூபா 105,000 பெறுமதியான ECG Machine இயந்திரம் ஒன்றும்,
•ரூபா 557,000 பெறுமதியான ICU Bed ஒன்றும்,
•ரூபா 21,000 பெறுமதியான Sphygmomanometer இயந்திரம் ஒன்றும்
என்பனவே இவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு 'எதிர்க்கட்சியின் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இது வரை 42 கட்டங்களில் 1176 இலட்சம் (117,653,500) ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றுநோயின் ஆரம்பத்திலேயே இங்கு வரவிருக்கும் ஆபத்து குறித்து பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தான் அறிவித்ததாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், முகக்கவசங்களின் முக்கியத்துவம் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்குள் நுழையும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் இந்த தொற்றுநோய்க்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் தான் பேசியதாக தெரிவித்தார்.
ஆனால் அவ்வாறு கூறியவற்றைப் பார்த்து ஏளனமாகவும் நையாண்டியாகவும் சிரித்தவர்களுக்கு இப்போது தான் சொன்னது உண்மை என்பதை உணர வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment