Header Ads



அம்பாறையில் பலத்த மழை - அறுவடைக்கு தயாராகவிருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின


( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்டத்தில்  பெய்து வரும்  அடைமழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் அறுவடைக்கு தயாராகவிருந்து நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட வேளாண்மை பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளமையால்  விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

பொத்துவில் , பாணம , திருக்கோயில் , அக்கரைபடபற்று , அட்டாளைச்சேனை , ஒலுவில் , நிந்தவுர் , பாலமுனை , காரைதீவு , சம்மாந்துறை , வரிப்பத்தஞ்சேனை , இறக்காமம் , மல்வத்த , நற்பிட்டிமுனை , ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட வேளாண்மையே இவ்வாறு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு  நெல் விளைச்சல் குறைவடைந்த போதும், நெல்லுக்கான விலை அதிகரித்துக் காணப்படுகிறது. அதிகமான விவசாயிகள் தாம் அறுவடை செய்த நெல்லை தனியார் அரிசி ஆலைகளுக்கு வழங்காமல் வீடுகளிலே சேமித்தும் வைத்துள்ளனர். சில விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கு போதிய வெயில் இல்லாத காரணத்தால் செய்வதறியாது திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் தனியார்த் துறை வர்த்தகர்கள் 66 கிலோகிராம் கொண்ட ஒரு மூட்டை நெல்லை 4800 ரூபா முதல் 5000 ரூபா வரை கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது


No comments

Powered by Blogger.