Header Ads



நமது பிரதமர் தற்போதைய ஜனாதிபதியிடம் வந்து, எதையாவது நினைவுபடுத்தினால் அவர் வேண்டாம் என்று சொல்லமாட்டார்


கொழும்பு தாதியர் கல்லூரியின் 153 தாதியர்கள் நைட்டிங்கேல் உறுதிமொழி வழங்கி சேவையில் இணையும் நிகழ்வு இன்று (25) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கான நினைவேந்தலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், 2018ஆம் ஆண்டுக்கான தாதியர் குழுவின் முதலாம் ஆண்டு பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற எஸ்.ஏ.டி.எம்.சுபசிங்க, ஏ.எஸ்.வீரசிங்க, கே.டி.சி.பியூமிகா ஆகிய மூன்று மாணவிகளும் கௌரவ பிரதமரிடம் இருந்து சிறப்புப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், நாரஹேன்பிட்டி அபயராமதிபதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர்.

தாதியர் சேவை பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை. தாதியர் சேவை என்பது இந்த நாட்டிலும் இந்த சமுதாயத்திலும் விலைமதிப்பற்ற சேவையாகும். தாதியர் சேவை என்று வரும்போது இது வேலையல்ல, தொழில். சில சமயம் நீங்கள் செய்யும் சேவைக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது என்பது வேறு விடயம். ஆனால் நாங்கள் ஒரு நல்ல சேவையை வழங்க உறுதி பூண்டுள்ளோம்.

இன்று தாதியர் சேவையைப் பார்க்கும்போது, 1966ல் இருந்து அதை பற்றி கூறுவதற்கு எனக்குத் தெரியும். அன்றிலிருந்து இவர்கள் எல்லோரும் அடிமைகளாகவே வாழ்ந்தார்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. இன்று அந்த அடிமை யுகம் முற்றாக ஒழிக்கப்பட்டு சுதந்திர யுகமாக மாறியுள்ளோம். இன்று இந்த நாட்டில் பெருமையுடன் வாழ உங்களுக்கு பலம் கிடைத்துள்ளது.

நமது பிரதமர் தற்போதைய ஜனாதிபதியிடம் வந்து எதையாவது நினைவுபடுத்தினால் அவர் வேண்டாம் என்று சொல்லமாட்டார். எமது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் எமக்கு செவிசாய்க்கிறார். இவர் நன்கு தேடிப்பார்த்து பணியாற்றுகின்றார்.

கொவிட் காலத்தில், தொற்றுநோய்களின் போது, அதே போல் போரின் போது, அல்லது பேருந்து கவிழ்ந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போது, உங்கள் கைகளின் விடாமுயற்சி மிகவும் தெளிவாகத் தெரிந்தது. தாதியர் சேவை என்பது புத்தர் எப்போதும் மதிக்கும் ஒரு சேவை.

எமது கௌரவ பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த டிப்ளோமாவை எமக்கு வழங்குமாறு நாம் கேட்டிருந்தோம். அவர் அதனை பெற்றுக் கொடுத்தார். அவரே சான்றிதழ்களை வழங்கினார். பட்டமும் பல்கலைக்கழகமும் வேண்டும் என்றோம். அவர் அலரிமாளிகையில் விவாதம் நடத்தி அதற்கு ஒப்புதல் அளித்தார். எனினும், நாட்டில் உள்ள சுகாதார நிபுணர்களின் சில குறைபாடுகள் காரணமாக அவற்றைச் சரியாகச் செய்ய முடியவில்லை. இப்போது நாம் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மே 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினத்தன்று பல்கலைக்கழகத்திற்கான உறுதிமொழி வழங்கும் பணியை நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம். 

நீங்கள் உங்கள் தொழிலில் பெருமை கொள்ளுங்கள். பெருமைமிக்க தாதியர்களை இலங்கை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே எமது தேவை. அதன்போது கடமையைச் செய்வோம் உரிமைகளை வெல்வோம் என்ற எண்ணக்கருவை மறந்துவிடாதீர்கள்.

1 comment:

  1. இலங்கையின் கல்வி வரலாற்றில் மாசு படியவைத்து மஞ்சல் காவையன்.

    ReplyDelete

Powered by Blogger.