Header Ads



எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுமா..?


எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், தற்போது டீசல் ஒரு லீற்றருக்காக 50 ரூபா நட்டத்தையும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக 16 ரூபா நட்டத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருட்களை விலைகளை அதிகரிப்பதற்கான யோசனையை, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு, கடந்த 7ஆம் திகதி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்கும் இடையிலான பதற்ற நிலை மற்றும் அமெரிக்க மத்திய பரிவர்த்தனையின் மூலம், வட்டி வீதம் அதிகரிக்கும் போக்கு என்பன காரணமாக, உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி, ப்ரெண்ட் மசக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 3.3 சதவீதத்தினால் அதிகரித்து, 94 தசம் 44 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டபிள்யு.டி.ஐ  எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 3.6 சதவீதத்தினால் அதிகரித்து, 93 தசம் 10 டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கமைய, எரிபொருட்களின் விலைகள் இந்த ஆண்டில், 20 சதவீதத்திற்கும் அதிகளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.