மக்களைத் தவறாக வழிநடத்தி, நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ள முயற்சி - ஜனாதிபதி தெரிவிப்பு
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டவாறு, விவசாயப் பெருமக்களின் வருமானத்தை நூற்றுக்கு நூறு வீதத்தால் அதிகரிக்கவும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் “முதலாவது பொதுஜன பேரணி” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில், அநுராதபுரம் சல்காது மைதானத்தில், இன்று (09) பிற்பகல் இந்தப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், பெரும் சவால்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் அடைந்த இலக்குகள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் இந்தப் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுக் கூட்ட வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அவர்களும் அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், “மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.
அதுதான் பாருங்கள், பொதுமக்களை தவறாக வழிநடாத்தி இந்த நாட்டை அதள பாதாளத்துக்குள் தள்ளும் சக்திகள் இல்லாவிட்டால் இந்த நாடு சிங்கப்பூரையும் தாண்டி ஜப்பானையும் தோல்விடையச் செய்திருக்கும். அந்த பொதுமக்களை வழிகெடுக்கும் சக்திகளைத் தேடிப்பாருங்கள்.
ReplyDelete