சண்முகா...! சண்முகா...!
பொட்டு வைத்துக்கொண்டு போகமுடியாது...
சாரி அணிந்தால் சரிவராது...
"அபாயாவா..?" அனுமதிக்க முடியாது...!
இலங்கை school களில்... இனி நிர்வாணமே சீருடை...!!
###
இத்தனைகாலம் இணைந்துதானே இருந்தாய்...?
இதே உடையுடன் தானே... Staff Meeting நடாத்தினாய்...
வளாகம் முழுவதும் நான் வகுப்பெடுப்பதை பார்த்தாய்...
எப்போதிருந்து கண்ணில்...
ஆடை மட்டும் தெரியும் அசிங்கம் ஆரம்பித்தது...?
எந்த நஞ்சினால்... இந்த
சத்திவரும் side effect ஏற்பட்டது...?
பாடசாலை...
ஒழுக்கக் கோவையில் ஒன்றுக்கிருக்கும்
புது நோய் புகுந்தது..?
###
எங்களுக்கு எழுத்தறிவித்த கோணேஸ்வரி மிஸ்
இப்படிப் பேசவில்லை...
நான் பார்த்த நடராஜா Sir
இப்படி நடந்துகொள்ளவில்லை...
ஸ்ரீரஞ்சனி Teacher என்றுமே
என் தொப்பியை கழட்டியதில்லை...
"சண்முகா" நிச்சயம்...
சண்முகனிடமிருந்து வந்ததில்லை...!!
###
"காக்கை குருவிகள் எங்கள் ஜாதி" என்ற புத்தகத்தில்
ஒரு ஆடைக்கு இடமில்லாமல் போய்விட்டது...
"கடலும் மலையும் எங்கள் தோழன்" எனக் கற்பித்த வளாகத்தில்...
உயிருக்கே உடைச்சுதந்திரம் மறுக்கப்படுகிறது...
கருத்து இருக்கிறது...
கற்பைக் காணவில்லை...!!
###
இனவாதம்...
அதிபருக்கே அறத்தை மீறக் கற்றுதரும்...
அடித்தவனே அழுதுகொண்டு....
ஆஸ்பத்திரி போகும் அசிங்கத்தை சரிகாணும்..
பிஞ்சுப் பிள்ளைகளின்
நெஞ்சில் விஷமேற்றி
வீதியில் விடும் கேவலத்தை ரசிக்கும்...
செத்த மீனை விண்மீனாய்...
மீடியாவில் காட்டி பொய்களை விற்கும்...!!
###
சண்முகாவின் சாக்கடையை
யாரேனும் சுத்தம் செய்யுங்கள்...
பாடசாலையில் பரவும்...
பாசிசக் கொரோனாவை
கொளுத்தி நிறுத்துங்கள்...
குழந்தைகளின் நிழலில் நிற்கும்...
அந்த குண்டர்களை அப்புறப்படுத்துங்கள்...!!
புற்றுநோய்...!!
சண்முகாவுக்குள் சமாதியாக
சத்திரசிகிச்சை செய்யுங்கள்...
முடிந்தால்...
பிள்ளைகள் கொண்டு... - அங்கே
ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுங்கள்...
###
யாழ்ப்பாண library...
இன்று "பஹ்மிதா"வின் இதயத்துக்குள் எரிக்கப்படுகிறது...
கனரக விமானம் ஒன்று,
இதோ பன்மைத்துவதில் குண்டெறிந்து செல்கிறது...
ஒரு பெண்ணுரிமை...
கண்முன்னே கற்பழிக்கப்பட்டிருக்கிறது....
இரண்டு நாளாய்
என் இதயம் தேடுகிறது...
எங்கே நீதி..?
எங்கே விடுதலைப் புலிகள்....!!?
---
புத்தளம் மரிக்கார்
Furkanhaj says:-சூப்பர்.
ReplyDelete