Header Ads



எந்த தேவாலயத்திலும் சிலுவையின் முன், சத்தியம் செய்யத் தயார் - மைத்திரிபால அறிவிப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை என எந்த தேவாலயத்திலும் சிலுவையின் முன்னால் தன்னால் சத்தியம் செய்ய முடியும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவை நிர்மலி தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்து கொண்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன,மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறப்போவதை அறிந்திருந்தும் நான் வெளிநாடு சென்றேன் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல் .

பாதுகாப்பு தரப்பினரோ புலனாய்வு தரப்பினரோ கு தகவல் வழங்கியிருந்தால் நான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

அவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் நான் உடனடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கான உத்தரவை வெளியிட்டிருப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இவர் ஏற்கனவே ஜனாதிபதி கமிசனிடம் வழங்கிய பதிவில் இவர் கூறிய அத்தனையும் பொய் என ஏற்கனவே பொய் என நிரூபிக்கப்பட்டது. இப்போது அவை அத்தனையும் மறந்த பின்னர் பொய் மூட்டையை ஒவ்வொன்றாக வௌியிட ஆரம்பித்திருக்கின்றார்.

    ReplyDelete
  2. இவர் சிறைசெல்வதை விட்டும் தன்னைக் காத்துக் கொள்ள முயன்றால் இயற்கைச் சட்டம் அவரைச் சிறையில் தள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.