Header Ads



இராஜாங்க அமைச்சர் அருந்திக இராஜினாமா - மகனுக்கு விளக்கமறியல்


இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

ராகமையில் அமைந்துள்ள, தங்குமிட விடுதியில் வைத்து  களனி பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் வரையில்,  தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

2

தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் உள்ளிட்ட ஐவரும், எதிர்வரும் 7ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராகமவில் உள்ள மருத்துவபீட தங்குமிடத்துக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து, தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் மகன், சட்டத்தரணியின் ஊடாக, ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அனைவரும் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.