Header Ads



நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், ஏற்படுத்தும் மோசமான விளைவு - எச்சரிக்கிறார் கலாநிதி பிரியங்கா


நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலாநிதி பிரியங்கா துனுசிங்க தெரிவித்துள்ளார். 

அந்த குடும்பங்களில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

"குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாங்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது. இதன் ஊடாக வறுமை, போசாக்கின்மை போன்ற பிரச்சினைகள், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற ஏழைகள், கிராமப்புற ஏழைகள் மற்றும் குறிப்பாக பெருந்தோட்டத் துறையினர் பெரும் நெருக்கடியை எதிர்க்கொள்ளக்கூடும். அவர்கள் தங்கள் வருமானத்தில் சுமார் 50% ஐ உணவுக்காக செலவிடுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஒருவகையில் குறைந்த உணவை உட்கொள்ள வழிவகுக்கும். அவ்வாறு இல்லையாயின், உணவு அல்லாத விடயங்களுக்கான செலவுகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பிற விடயங்களுக்கான செலவுகளை குறைக்க வேண்டி ஏற்படும். இதன்காரணமாக ஏற்படும் மோசமான சூழ்நிலை நீடிக்க வாய்ப்புள்ளது."

No comments

Powered by Blogger.