Header Ads



முட்டை தாக்குதல்கள் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் அளவையே காட்டுகின்றது - சஜித்


அன்மையில் மக்கள் விடுதலை முன்னணி மீது முட்டை தாக்குதல்கள் மேற்கொண்டமையும், ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பேரன் மீதான முட்டைத் தாக்குதல் மேற்கொண்டமை போன்ற சம்பவங்கள் மூலம் வெளிப்படுவது அன்மைக்காலமாக அரசாங்கமும் சமூகமும் சீரழிந்து வருவதன் அளவு இதுவாகும் என்றே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொள்கையில் இருந்து விலகி,வேலைத்திட்டங்கள் செயலிழந்து, விழுமிய மதிப்புகளால் வீழ்ச்சி கண்ட நாட்டால் முன்னேற முடியாது என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர்,முட்டை தாக்குதல் போன்ற கேவலமான செயல்கள் சீரழிந்த அரசாங்கத்தின் யதார்த்தத்தையே புலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான 'பிரபஞ்சம்'திட்டத்தின் 11 ஆவது கட்டம் இன்று (01) ஆரம்பமானது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த  நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை,தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற,ஸ்மார்ட்  கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் 'பிரபஞ்சம்' முன்னோடித் திட்டத்தின் பதினோராவது கட்டத்தில், எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (850,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை மதவாச்சிய அகுநொச்சி மகா வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) வழங்கி வைத்தார்.

பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் முகமாக தகவல் தொழில்நுட்பப் புரட்சியை முன்கொண்டு செல்வது அதன் ஒரு  தொடக்கங்களில் ஒன்றாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதிகாரம் இல்லாமலயே, தான் குறித்த புரட்சியை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தகவல் தொழில் நுட்ப புரட்சி,டிஜிட்டல் பொருளாதாரப் புரட்சி என்பவற்றைக் கூறலாம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த புரட்சி உலகின் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க பில்லியன் டொலர் வியாபாரம் என அடையாளப்படுத்தப்படும் கங்வேனன் வியாபாரம் உலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர்,இவற்றை உருவாக்கும்போது நம் நாட்டிலும் அந்நியச் செலாவணி பிரச்சினையோ பற்றாக்குறையோ ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து சிலர் கபடத்தனமாக பேசுகின்றனர் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர்,அவ்வாறானவற்றை தான் கருத்திற் கொள்வதில்லை என தெரிவித்ததோடு,

இந்நாட்டின் குழந்தைகளுக்காக நாடு முழுவதும் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.