Header Ads



நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற தம்பதியினர் சடலங்களாக மீட்பு


- டி.ஷங்கீதன் -

குருநாகல்- கொக்கரல்ல பகுதியிலிருந்து  நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த இருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை ​தொடர்பில், நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

59 வயதான ஆணொருவரும்  57 வயதான பெண்ணொருவருமே அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து   நேற்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் குருநாகல் பகுதியில் இருந்து வருகைத் தந்து விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இவர்கள் இரவு  தங்களுடைய உணவு தேவைக்காக பயன்படுத்திய பாபிகியுவ் என்று கூறப்படும் இயந்திரத்தை, தங்களை குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக, அறைக்குள் வைத்து நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, அந்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

உயிரிழந்தவர்களின்  சடலம் இன்று (27)  காலை நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகள் இடம் பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக நுவரெலிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம் நுவரெலியாவில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆம் இது பற்றிய தௌிவி்ன்மை காரணமாக சவூதி அரேபியா உற்பட வளைகுடா நாடுகளில் குளிர்காலத்தில் அறையைச் சூடாக வைத்துக் கொண்டு நித்திரைக்குச் சென்ற பலர் இதுபோல் மரணத்தைத் தழுவியுள்ளனர். அதாவது பார்பகியூ செய்யும் அடுப்பின் தீ கொளுத்தப்பட்டிருந்தால் அதிலிருந்து காபன் மொனொக்ைஸட் வௌியேறும். அதைச் சுவாசிக்கும் போது நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க ஆரம்பிக்கும். காலையில் பறித்து வைத்த ரோஜாப்பூ மாலையாகும் போது வாடுவது போல இந்த நஞ்சு வாயுவைச் சுவாசிப்பவர்களின் சுவாசப்பை மெதுமெதுவாக சுவாசிக்கும் சக்தியை இழக்கச் செய்து அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடைய உயிர் பிரிந்துவிடும். ஆபத்து என யாரையும் உதவிக்கு அழைக்கவோ அல்லது சத்தமிடவோ அவர்களுக்கு இயலாது போகும். இது மிகப் பெரிய ஆபத்தாகும். இது பற்றிய தௌிவை தொலைக்காட்சி நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் ஊடாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஒரு முக்கியமான சமூகத் தேவையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.