Header Ads



கறுப்புச் சந்தையில் ஆயுதம் வாங்கிய செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுக்கிறது


யுத்தத்தின் போது கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை அரசாங்கம் கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார் என, நேற்று (31) வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பேசியதாக தெரிவித்த அமைச்சு, குறித்த செய்தியில் கூறப்பட்ட கருத்துக்களை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பல கொள்வனவுகள் தொடர்பில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்க

No comments

Powered by Blogger.