Header Ads



ஹிஜாப் சர்ச்சை: எங்களுடைய வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம் - பாகிஸ்தானுக்கு ஒவைஸி எச்சரிக்கை


ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஆதரவான கருத்துகளுக்கு அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். "இது எங்கள் வீட்டுப் பிரச்னை. இதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஒவைஸி பேசினார்.

“பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் ஒன்றை சொல்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என பார்க்காதீர்கள், அங்கேயே பாருங்கள். உங்களுக்கு பலூச்சிஸ்தான் பிரச்னை, உள்நாட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை பாருங்கள். இந்த நாடு என்னுடையது. இது உங்களுடையது அல்ல. இது எங்கள் வீடு. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்க முயன்றால் காயமடையும் என்று ஒவைஸி எச்சரிக்கும் வகையில் பேசினார்.

2 comments:

  1. Well said
    பாக்கிஸ்தானே ஒரு பயங்கரவாத நாடு, அப்படியிருக்கும் போது இந்தியாவுக்கு ஆலோசனை சொல்ல என்ன தகுதி உள்ளது?

    ReplyDelete
  2. இவன் பிஜேபியின் கள்ள குழந்தையென்பது இப்படி சில சமயங்களில் வெளிவந்துவிடுகின்றது

    ReplyDelete

Powered by Blogger.