Header Ads



முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை தூண்டியவர், ஒருநாடு ஒரு சட்டம் செயலணி தலைவராக உள்ளார் - அம்பிகா


விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து பொய்யான தகவல்களை தெரிவிக்கும் கட்டுரைகள் சமூக ஊடகங்களில் காணப்படுவது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த அறிக்கை இனவெறி கொள்கைகளை கொண்டவர்கள் என்னை துன்புறுத்துவதற்கும்,எனக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுவதற்கும்.(சைபர் வன்முறை உட்பட ) வழிவகுக்கலாம்.எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உபகுழுவிற்கான எனது அறிக்கை குறித்த வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கான எனது பதில் என்ற அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்அ வர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமை தொடர்பான உபகுழுவிற்கான எனது அறிக்கை குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து நான் ஆழ்ந்த ஏமாற்றமடைகின்றேன்.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கை பல தவறான அர்த்தப்படுத்தல்கள் -உள்ளீடுகளை உள்ளடக்கியுள்ளது.

மேலும் அரசாங்கத்தின்கொள்கைகளை விமர்சிப்பவர்களை செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் நோக்கத்தை கொண்டது போல காணப்படுகின்றது.

உபகுழுவிற்கான எனதுஅறிக்கையில் நான்  பல விடயங்கள் குறித்து குறிப்பிட்டேன்- இந்த விவகாரங்கள் குறித்து நான் ஏற்கனவே உரிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளேன்.இது பொதுவெளியில் காணப்படுகின்றது.

இவை ஏனையசிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சிவில் சமூக அமைப்புகளும் பல வருடங்களாக சுட்டிக்காட்டியுள்ள பதிவு செய்துள்ள  விடயங்கள்.

இந்த சூழமைவில் அரசாங்கம் எனது அறிக்கையை தவறாக வழிநடத்துவது என முத்திரை குத்துவது நோக்கம் - நான் குறிப்பிட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவத்தை குறைத்து காண்பித்து மக்களை ஏமாற்றுவது என எண்ணத்தோன்றுன்கின்றது.

ஜிஎஸ்பிபிளஸ் தொடர்பான வரிச்சலுகையை பயன்படுத்தி அரசாங்கத்தை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொள்ளவேண்டும் என விடுத்த வேண்டுகோள் குறித்து அரசாங்கம்குற்றம்சாட்டுவது கவலையளிக்கின்றது.

ஜிஎஸ்பி பிளஸ்சலுகைகள் என்பது அதனை பெறுபவர் தனதுமனித உரிமை கடப்பாடுகளை பூர்த்திசெய்வதை அடிப்படையாக கொண்டது.

இந்த மனித உரிமை கடப்பாடுகள் ஐக்கியநாடுகளின் உறுப்புநாடு என்ற அடிப்படையிலும் பல பிரகடனங்களில் கைச்சாத்திட்டுள்ள அடிப்படையிலும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய கடப்பாடுகள்.

இந்த கடப்பபாடுகள் இலங்கை பிரஜைகளிற்கு பாதுகாப்பை அளிக்ககூடியவை.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் பாதிப்புகள் ஏற்படும் என்றால் அதற்குஅரசாங்கம் அந்த வரிச்சலுகை தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றாமையே காரணம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பது வருந்தத்தக்க விடயம்.

ஆகவே மோசமான விளைவுகளிற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும்.

ஆனால் அரசாங்கம் புறக்கணிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுப்பவர்களே உதாரணத்திற்கு சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள்  ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பில் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளிற்கு காரணம் என குற்றம்சாட்டுகின்றது.

இது குற்றச்சாட்டை வேறு ஒருவர் மீது சுமத்தும் முயற்சி.

பலவீனமான நிலையில் உள்ள சமூகங்கள் பாதிக்கப்படாததை உறுதிசெய்வதற்கு அரசாங்கம்  இந்த நெருக்கடிக்குபொதுமக்களின் சிறந்த நலன்களை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட  மோசமான தீர்மானங்களே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்,

ஆயுதமோதலிற்கான அடிப்படை காரணங்களை( உதாரணத்திற்கு பாரபட்சம்) மறுதலிப்பதால் இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் பாதிக்கப்படுகின்றன,மாறாக வெளிவிவகார அமைச்சு அடிப்படை காரணங்களை விடுதலைப்புலிகளின்பிரச்சாரம் என முத்திரை குத்துகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை தமிழ் மக்களிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் நீண்டகால தந்திரோபாயத்தை கருத்தில் கொள்ளும்போது இது ஆபத்தானது.

அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது போல அவ்வாறான கலந்துரையாடலை சமூகஐக்கியத்திற்கு ஆபத்தானது என முத்திரை குத்துவது மாற்றுக்கருத்தினை முடக்குவதற்காக  ஐசிசிபிஆரினை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

அரசாங்கம் இந்த சொற்தொடரை பயன்படுத்தியுள்ளமை சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் - குறிப்பாக வடக்குகிழக்கில் மேலும் குடிமை தளத்தினை மேலும் குறைக்கும்.இந்த தளம் குறைகின்றது என்பதை  அரசாங்கம் மறுத்துவருகின்றது

இந்த அடிப்படையில் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் காணப்படுமஉட்குறிப்புகள் ஆபத்தானவை . இந்த அறிக்கையை தொடர்ந்து எனக்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து பொய்யான தகவல்களை தெரிவிக்கும் கட்டுரைகள் சமூக ஊடகங்களில் காணப்படுவது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த அறிக்கை இனவெறி கொள்கைகளை கொண்டவர்கள் என்னை துன்புறுத்துவதற்கும்,எனக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுவதற்கும்.(சைபர் வன்முறை உட்பட ) வழிவகுக்கலாம்.

தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் சிவில்சமூகஅமைப்புகளால்மாத்திரமின்றி மனிதஉரிமை ஆர்வலர்கள் ஐக்கியநாடுகள் போன்றவை மாத்திரமின்றிமிக முக்கியமாக உச்சநீதிமன்றம் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றால் கூட  நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,

2020க்கு பின்னர் அரசாங்க அதிகாரிகளின் வன்முறைகள் குறித்த பல சம்பவங்கள் வெளிப்படையாக பதிவாகியுள்ளன.எனினும் இதுவரை எவரும் பொறுப்புக்கூற செய்யப்படவில்லை.

போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் ( அறிக்கையில் போதைப்பொருளும் யுத்தமும் எனதவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது) கண்மூடித்தனமான கைதுகள் தடுத்துவைத்தல் மற்றும் சட்டவிசாரணைக்கு புறம்பானது என சந்தேகிக்கப்படும் படுகொலைகளி;ற்கு வழிவகுத்துள்ளது.

இலங்கைசட்டத்தரணிகள் சங்கமும்இது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது.

போதைப்பொருட்களையும் சர்வதேச போதைப்பொருள் விநியோகத்தையும்கட்டுப்படுத்துவது அவசியம் ஆனால் அந்த கொள்கைகள் மனித உரிமை தராதரங்களை பின்பற்றுவதாக காணப்படவேண்டும்.

இலங்கைவெளிவிவகார அமைச்சு இலங்கை மதச்சார்பற்ற நாடு என தெரிவி;க்கின்ற போதிலும் ஜனாதிபதி தனது பல அறிக்கைகளில் சிங்கள பௌத்தர்களை பாதுகாப்பதே தனது முக்கிய கடமை எனவும்,ஐக்கியமாக வாழநினைக்கும் ஏனைய அனைவரையும் நாட்டின் இந்த முக்கிய சமூககலாச்சார அடிப்படைக்குள் உள்வாங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் எனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சிங்கள பௌத்ததேசியவாதத்திற்கான உதாரணமாக இது காணப்படுகின்றது.

இன்னுமொரு உதாரணம் கிழக்குமாகாணாத்திற்கான தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி.

இதில் பௌத்த மதகுருமார் இடம்பெற்றுள்ளனனர்- பௌத்தமதகுரு ஒருவர் இதன் தலைவராக உள்ளார்.

சீற்றத்தை ஏற்படுத்துகின்ற பாரபட்சத்தை வெளிப்படுத்துகின்ற அறிக்கைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ள முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை தூண்டிய மதகுரு ஒருவர் ஒருநாடு ஒரு செயலணியின் தலைவராக உள்ளார்.

இவ்வாறான நியமனங்கள் அரசாங்கம் சமூக ஐக்கியத்தை பேணுவது  குறித்து அக்கறையுடன் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

வெளிவிவகார அமைச்சு இராணுவமயப்படுத்துதலுடன் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்தலை இணைத்துள்ளது.முதலாவது சிவில் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய கடமைகள்  செயற்பாடுகளை இராணுவம் முன்னெடுத்துள்ளதை குறிப்பது.

இராணுவமயப்படுத்துதல் என்ற நிகழ்வுகுறித்து நானும் சிவில் சமூகத்தினரும் துல்லியமாக பதிவு செய்துள்ளோம்.

சிவில் சமூகத்தினரை அரசாங்கம் எதிரிகளாக கருதவில்லை சகாக்களாக கருதுகின்றது என அமைச்சு தெரிவித்துள்ள போதிலும்ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எனது அறிக்கையை சுட்டிக்காட்டி வெளியாகியுள்ள அறிக்கை உடன்படமறுத்தல் தொடர்பான அரசாங்கத்தின் சகிப்புதன்மைக்கான சிறந் உதாரணம்.

மேலும்சிவில்சமூக அமைப்பினர் மற்றும் பிரதிநிதிகள் குறிப்பாக வடக்குகிழக்கை சேர்ந்தவர்கள் கடந்த ஒருவருடகாலமாக பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

தவறுசெய்தமைக்கான எந்த ஆதாரமும் இல்லாதபோதிலும் அவர்கள் வழமையான சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை சிவில் சமூகத்துடன் சகா என்ற அரசாங்கத்தின் வலியுறுத்தல் குறித்து கேள்வியை எழுப்;புகின்றது.

இந்த நாட்டின் மக்களால் தெரிவு செய்ய்பட்ட பிரதிநிதிகளின் துன்பங்களிற்கும் சமூகங்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்போது இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் அது குறித்து கேள்வி எழுப்புவது எனது உரிமை எனது குடிமைசார் கடமை.

இந்த உரிமையை மதிக்கும் நாட்டை மாத்திரமே உண்மையான சுதந்திர ஜனநாயக நாடு என கருதமுடியும்.

No comments

Powered by Blogger.