இலங்கை இராணுவம் தயாரித்துள்ள புதிய வாகனம்
2020-2025 ஐந்தாண்டு இராணுவத்தின் எதிர்கால திட்டங்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை இராணுத்தின் மின் இயந்திர மற்றும் பொறியியல் படைப் பிரிவினால் புதிய இராணுவ வாகனத்தை தயாரித்துள்ளது.
இந்த வாகனம் Mine Resistance Ambush Protected Vehicle என அழைக்கப்படுகிறது. கண்ணி வெடிகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவப் படைப் பிரிவின் படைப்பு மற்றும் உற்பத்தி திறனை வெளிப்படுத்தும் விதமாக இராணுவத்தின் புதிய தயாரிப்பு அமைந்துள்ளது.
இராணுவத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்களின் இயந்திரங்கள், செசி போன்றவற்றை பயனபடுத்தி இந்த புதிய ஆறு கொள்கலன் டீசல் கொள்ளவு கொண்ட Unicob-MRAP வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இம்முறை 74 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் நடைபெறும் இராணுவ ஆயுத ஊர்வலத்தில் இந்த புதிய வாகனம் பயணிக்க உளளது.
புதிய வாகனத்தை இராணுவ தளபதி சவேந்திர சில்வா பார்வையிட்டுள்ளார்.
தேசிய உணர்வுடன் நல்ல பாராட்டத்தக்க விடயம்
ReplyDeleteCongratulations SL ARMY