Header Ads



இலங்கைக்கு 6,600 மில்லியன் ரூபாய்களை கடன் வழங்குகிறது குவைத் - பசில் ராஜபக்ஷ முன் ஒப்பந்தம்


மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கும் 10 மில்லியன் குவைத் தினார்களை (6,600 மில்லியன் ரூபா) கடனுதவியாக வழங்க குவைத் முன்வந்துள்ளது. பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் இந்த நிதியை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.

இந்த மருத்துவ பீடம் களுத்துறை போதான வைத்தியசாலையை அண்டியதாக அமைக்க

திட்டமிடப்பட்டுள்ளதோடு இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ பீட புதிய கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கல்விசார் தளபாடங்கள் மருத்துவ பீட உபகரணங்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்யப்படும். 2022 தொடக்கம் 2026 காலப்பகுதியில் கல்வி அமைச்சினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். 

இந்த நிதி உதவி தொடர்பான ஒப்பந்தம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் குவைத் தூதுவர் காலாப் டேர் ஆகியோரின் பங்களிப்புடன் கையெழுத்திடப்பட்டது. நிதி அமைச்சு சார்பில் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் குவைத் நிதியம் சார்பில் அதன் பிரதிப் பணிப்பாளர் டெனால் ஒலாயானும் கைச்சாத்திட்டனர்.

1 comment:

  1. பாதுகாப்பாக வைத்துக்ெகாள் என கரங்கன் கையல் கொடுத்த பூமாலையின் கதைதான். மொரட்டுவ பல்கலைக்கழகத்தல் மருத்துவபீடம் ஆரம்பிப்பது மிக நல்ல விடயம். அதன் குவைத் அரசாங்கம் அதன் கொனட்ரட்க்டர்களை நியமனம் செய்து முழு வேலைகளையும் அதன் கண்காணிப்பல் செய்ய வேண்டும். அத அதற்கு அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். அமெரிக்கா எந்த உதவித்திட்டத்தை அனுமதித்தாலும் அதன் செலவை ஒருபோதும் அரசிடம் ஒப்படைக்காது. அதன் திட்டங்களை American Aid நிறுவனத்தின் உதவியுடன் செய்து முடிக்கும். இல்லாவிட்டால் அந்த பணம் அனைத்தும் முதலையின் வாயில் போட்ட கோழிக்குஞ்சுதான்.

    ReplyDelete

Powered by Blogger.