Header Ads



பாக்கிஸ்தானிடம் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர்...?


பாக்கிஸ்தானிடம் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கொண்ட பாதுகாப்புக் கடன் வசதியை இலங்கை விரைவில் பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானிய செய்தித் தாள் இதனை தெரிவித்துள்ளது.

2021, பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரதமர் இம்ரான் கான், இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்திக்கொண்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு கடன் வரி வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் பாக்கிஸ்தானிய நிதியமைச்சு இது தொடர்பாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பாக்கிஸ்தானிய வெளிவிவகார அமைச்சும் இந்த வரைவுக்கு உடன்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை,தற்போது, புரிந்துணர்வு உடன்படிக்கை, பொருளாதார விவகாரப் பிரிவு மற்றும் நிதிப் பிரிவுகளால் சரிபார்க்கும் பணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்தங்களில், பாகிஸ்தானின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இராணுவ தளபாடங்களின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இலங்கை விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.