Header Ads



தனது ஐம்புலன்களால் 5 சாதனைகளை 12 நிமிடத்தில் நிகழ்த்தி உலக சாதனை படைத்த சாய்ந்தமருது பர்ஷான்

 


( அஸ்ஹர்இப்றாஹிம்)

 மருதூர் மெய்வல்லுனர் நட்சத்திர கழகம் ஒழுங்கு செய்திருந்த கல்முனை ஸரஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவரும் உலக சாதனை வீர்ருமான எம்.எஸ்.எம.பர்ஸான் அவர்களின்  ஐம்புலங்களால் மெய்சிலிர்க்கும்  சாகசம் புரியப்பட்டு சோழன் உலக சாதனைப் புத்தகத்தில்  பதியப்படுவதற்கான சாகச நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஸாஹிரா தேசியக்  கல்லூரிஎம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் முன்னிலையில்  இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள்  சபையுடன் இணைந்ததாக உலகின் 26 நாடுகளில் வியாபித்திருக்கும் சர்வதேச சோழன் சாதனை  புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முன்னிலையில் ஐக்கிய நாடுகள்  சபையின் அங்கீகாரம் பெற்ற 26 நாடுகளைச்  சேர்ந்தவர்கள் இணையத்தளம் மூலம் நேரடியாக கண்டு களித்த இச்சாதனையாளரின் சாகச  நிகழ்வுகளை கல்முனைப் பிரதேச மக்களும் நேரடியாக பார்வையிட்டனர்

.காதினால் பலூனை  ஊதி உடைத்தல் , கண்களினால்இரும்பு கம்பியினை வளைத்தல் , பல்லினால் 5.7 கிலோ கிறாம் பாரத்தினை சங்கிலிகளின் உதவியுடன்   உயர்த்துதல். குளிர்பானத்தை முக்குத்துவாரத்தினூடாக அருந்துதல் , மூக்கு துவாரத்தினூடாக வயரை செலுத்தி வாயினூடாக எடுத்து மின் குமிழை எரியச் செய்தல். போன்ற 20 நிமிடத்தில் புரிய வேண்டிய செயற்பாடுகளை 12 நிமிடத்தில் நிகழ்த்தி உலக சாதனையை புரிந்து  உலக சாதனையை பதியும் சோழன் பத்தகத்தில் தனது சாதனையில் தனது பெயரை பதிவிட்டுள்ளார்  

இந்நிகழ்வில்  இவரின் சாதனையை பதிவதற்காக இலங்கைப் பிரதிநிதிகளான எம்.தனராஜன் , ரீ.இன்பராஜா , எஸ்.நிலக்ஸன ஆகியோர் வருகை தந்திருந்தனர்.


No comments

Powered by Blogger.