Header Ads



வேலை நாட்களை 4 ஆக குறைக்க மத்திய வங்கி யோசனை -- தனியார் வாகன பாவனையை குறைத்து பொதுப்போக்குவரத்துக்கு மாறுமாறும் கோரல்


நாட்டில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க அரசாங்கத்திடம் இலங்கை மத்திய வங்கி சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வாரத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைத்து, வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.

இதற்கமைய, நிறுவனங்களின் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 வரை தொடர வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

அதேபோல், நிறுவனங்களுக்குள் சேவையாற்றும் ஊழியர்களை காலை 9 மணி முதல் 3 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களை முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனியார் வாகனங்களின் பாவனையை குறைத்து பொதுப்போக்குவரத்துக்கு மாறுமாறும் மத்திய வங்கி கோரியுள்ளது.

தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. 


2 comments:

  1. அப்ப புட் போட்ல நின்று போகணும் பஸ் நிறம்பி வழியும் அப்ப சமூக இடைவெளி

    ReplyDelete
  2. புத்தியே இல்லாத புத்திமதி.

    ReplyDelete

Powered by Blogger.