Header Ads



எரிபொருள் கப்பல்கள் 4 வருகின்றன


எரிபொருளை ஏற்றிய 04 கப்பல்கள் எதிர்வரும் வாரத்துக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

37,500 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை நேற்று (19) வந்தடைந்திருந்தது.

சிங்கப்பூர் விநியோகஸ்தர் ஒருவரால் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாகவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.ஆர். ஓல்கா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றும் (20) எரிபொருள் கப்பலொன்று நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வருகைதரவுள்ள கப்பல்களில் டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் என்பன கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, அதற்கமைய, நாட்டில் போதுமான எரிபொருள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்கவுள்ளதாகவும் அதற்கான கட்டணத்தை மின்சார சபை செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நாளாந்தம் 6,000 மெற்றிக் தொன் எரிபொருள் தேவையே காணப்பட்ட நிலையில்,  சனிக்கிழமை (19), 9,000 மெற்றிக் தொன்னாக அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.