Header Ads



48 மணித்தியாலம் தாமதித்ததால் டீசல் கப்பலுக்கு 38,000 டொலர்கள் தாமதக் கட்டணம் செலுத்திய இலங்கை


டீசல் பற்றாக்குறை காரணமாக பொது போக்குவரத்து சேவையும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறது.

 நாட்டில் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (23) பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.

நேற்று (22) நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின்போது திறைசேரி செயலாளர் இலங்கை வங்கிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய, டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் அந்த கப்பலிலுள்ள டீசலை இறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் கடலில் உள்ளதாகக் கூறிய அவர், அதற்குத் தேவையான டொலரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், 37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலுக்காக இரண்டு நாட்கள் தாமதத்தின் பின்னர் 35 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு நேற்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது

No comments

Powered by Blogger.