Header Ads



இலங்கையில் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் - அரசாங்கம் என்ன செய்யப் போகிறது தெரியுமா..?


சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

அவர்கள் 30 நாட்களுக்காக இந்நாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

அந்த சுற்றுலாப் பயணிகளின் விசா 30 நாட்களில் காலாவதியாகிவிடும். 

எவ்வாறாயினும், உக்ரேனில் நிலவும் மோதல் காரணமாக இலங்கையில் தங்க விரும்பும் சுற்றுலா பயணிகளின் விசாவை நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா அமைச்சு சம்பந்தப்பட்ட பயண முகவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. 

சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியான பின்னர் உக்ரைனுக்கு நேரடி விமான சேவைகள் இருக்காது என்பதால் அவர்கள் வேறு நாடுகளின் ஊடாக அவர்களின் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முகவர் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

2 comments:

  1. அவர்கள் திரும்பிச் செல்லும் வரை அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்து அவர்களை நன்கு உபசரித்து பத்திரமாக அனுப்பிவைப்பது அரசாங்கத்தின் கடமை என்பதை உல்லாசப்பிரயாணத்துறை அமைச்சும் அரசாங்கமும் மிகவும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

    ReplyDelete
  2. அவர்கள் திரும்பிச் செல்லும் வரை அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்து அவர்களை நன்கு உபசரித்து பத்திரமாக அனுப்பிவைப்பது அரசாங்கத்தின் கடமை என்பதை உல்லாசப்பிரயாணத்துறை அமைச்சும் அரசாங்கமும் மிகவும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.