பேரிச்சம்பழம் இறக்குமதிக்கு எனக்கூறி 260 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 2 வர்த்தகர்கள் தொடர்பில் விசாரணை
நாட்டில் டொலர் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய இரண்டு வர்த்தகர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று (31) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிக்கையொன்றை சமர்பித்ததாக Hiru செய்தியாளர் தெரிவித்தார்.
மேற்படி வர்த்தகர்கள் இருவரும் வெளிநாட்டிலிருந்து பேரிச்சம்பழம் மற்றும் தங்க ஆபரணங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி டொலர்களை அனுப்பியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுங்கப் பிரிவினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதற்கமைய, குறித்த வர்த்தகர்கள் வெளிநாட்டுக்கு டொலர்களை அனுப்பியுள்ள போதிலும் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment