“2021 ஆண்டின் இராஜதந்திர உறவுகளுக்கான ஆளுமை” மிக்க நபராக ஓமானுக்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் தெரிவு
(Manas hussain)
புகழ்பேற்ற உலக வளர்ச்சி மன்றத்தின் (World Growth Forum) 2022 ஆண்டின் ஜனவரி மாத சஞ்சகை தனது 2021 ம் ஆண்டின் சிறந்த ஆளுமைமிக்க நபர்களின் பட்டியலில் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை “2021 ஆண்டின் இராஜதந்திர உறவுகளுக்கான ஆளுமை” மிக்க நபராக தெரிவு செய்து கௌரவித்துள்ளது. இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளில் மைல்கற்களை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் தமது தொழில் மற்றும் சொந்த வாழ்வில் உலக வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த உலகின் பலநாடுகளைச் சேர்ந்த ஆளுமைமிக்க நபர்கள் இத்தெரிவில் இடம்பெற்றுள்ளனர்.
இராஜதந்திர மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் அவருடனான ஓர் நேர்காணல் ஊடாக இச்சஞ்சிகை பிரசுரித்துள்ளது.
தேசங்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் உலக வளர்ச்சிக்குப் பங்களித்தல் என்ற இலக்கில் உலக நாடுகள் பலவற்றில் இயங்கி வரும் இந்த உலக வளர்ச்சி மன்றம் 85 க்கு மேற்பட்ட நாடுகளில் 25000 க்கும் அதிகமான தொழில் அதிபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கொண்ட வலையமைப்பையும் கொண்டுள்ளது.
Post a Comment