200 மில்லியன் ரூபாய் அரச நிதியை, செலவிட்ட வழக்கில் பசில் விடுதலை
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(01) பிறப்பித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக அரச நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது இந்த நாட்டில் வாழும் அத்தனை பொதுமக்களும் எதிர்பார்த்த வழக்கு முடிவுதான். இவர்கள் தான் தாம் நீதித்துறையில் தலையிடுவதல்லை என வௌியில் கூறிவரும் அதேநேரம் ஆட்சியில் உ்ள்ள கள்வர்கள் அவர்களுக்குத் தேவையான வகையில் சட்டத்தை மாற்றி தீர்ப்பை வழங்கவைக்கின்றனர்.ஒரு நாடு அழிவைநோக்கிச் செல்வதன் முதல் அறிகுறி அந்த நாட்டின் சட்டம் ஆட்சியாளர்களுக்குச் சார்பாக இருப்பதாகும்.
ReplyDelete