Header Ads



ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய், மின் கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் கெஹெலிய - அம்பலப்படுத்தியது JVP


கொழும்பு சரண வீதியில் அமைந்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு வழங்கிய மின்சாரத்திற்கான ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கட்டணம் குறித்து இலங்கை மின்சார சபை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளளது. அந்த கடிதம் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் இந்த சடிதத்தை அமைச்ருக்கு அனுப்பி வைத்துள்ளார். இலக்கம் 400 கீழ் 53 சரண வீதி (ஓப் புல்லர்ஸ்) வீதி கொழும்பு 7 என்ற முகவரியில் உள்ள அமைச்சரின் வீட்டு விலாசத்திற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி விலாசத்தில் உள்ள வீட்டுக்கு மின்சாரத்தை விநியோகித்தமைக்கான அமைச்சர் வசித்த காலப் பகுதியில் அதாவது 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 21 வரையான காலத்திற்கு ஒரு கோடியே 20 லட்சத்து 56 ஆயிரத்து 803.38 ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு சரண வீதியில் உள்ள வீட்டில் வசிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மின் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல என்ற தகவரல மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அத்துடன் மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனுப்பியுள்ள கடிதம் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1 comment:

  1. இந்த நாட்டில் அமைச்சராக அல்ல இந்த நாட்டின் குடிமகன் என்ற அந்தஸ்த்துக்கும் கேலியும் அவமானமும்தான் இ்துபோன்ற கேடிகளின் நடத்தைக்கான இழப்பை இந்த நாட்டு மக்கள் மீது சுமத்தும் இது போன்ற பயங்கரவாதிகளை இந்த நாட்டிலிருந்து துரட்சி பண்ணி மனித நடமாட்டம் இல்லாத தீவில் சிறையில் வைத்து உணவும் நீரும் வழங்காது செத்துமடியவைப்பது தான் ஒரு ஒழுக்கமான அரசாங்கம் செய்யும் மிகச் சாதாரண தண்டனை. அல்லது உயிரோடு பிடித்துக் கொண்டு சென்று காட்டில் வாழும் புலிக்கு இறையாகக் கொடுப்பது தான் இந்த அநியாயத்தக்கான ஆகக்குறைந்த தண்டனை.

    ReplyDelete

Powered by Blogger.