Header Ads



140 வருட வரலாறுடைய கைரியாவுக்கு அலி சப்ரி வாழ்த்து - முஸ்லிம் பெண்கள் கல்வியில் வளர்ச்சி காணுவதாக மகிழ்ச்சி


(அஷ்ரப் ஏ சமத்)

 இலங்கையில்  வாழும் முஸ்லிம்களது 1100 ஆண்டுகளுக்கு மேலாக  வரலாற்றில்  இலங்கைய  முஸ்லிம்கள் பாதுகாப்புத்துறை, பொருளாதாரத்துறை, நீதித்துறை, யுனானி வைத்தியத்துறை,  இன ஜக்கியத்தினைக் கட்டி வளா்த்தல் போன்ற சகல விடயத்திலும்  பங்காற்றி வந்துள்ள வரலாறு உ்ளளது..   என நீதியமைச்சா் அலி சப்றி தெரிவித்தார். 

தெமட்டக்கொடை கைரியா மகளிா் கல்லுாாியின் 140 வருட  நினைவு தின  நிகழ்வுகள்  கொழும்பில் உள்ள தாமறைத் தடாக திரையரங்கில் நேற்று(20) நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்றி   மேற்கண்டவாறு உரையாற்றினாா். இந் நிகழ்வுகள் கல்லுாாியின்  அதிபா நஸீரா ஹசனாா் தலைமையில் நடைபெற்றது.

 அமைச்சா் அலி சப்றி மேலும் அங்கு உரைநிகழ்த்துகையில் 

கொழும்பில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல ஏனைய பிரதேச வாழ் முஸ்லிம்  பெண்களுக்கும் கல்வி புகட்டி  பல  பெண் சாதனையாளா்களையும் புத்திஜீவிகளையும்  உருவாக்கிய ஒர்  வரலாறு கொண்டதொரு பாடசாலையாக  தெமட்டக் கொடை கைரியா  விளங்குகின்றது.  இக் கல்லுாாியின்  140 வருட  நீண்ட கால பயணத்தின் வரலாறுகளை இங்கு  மீள  அவதானிக்கும்போது அதன் வளா்ச்சி கண்டு   முஸ்லிம்கள்  பெருமையடைவதுடன் . இக் கல்லுாாி அபிவிருத்தியிலும் கல்வி அபிவிருத்தி முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்த சகலருக்கும்  நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.. இக் கல்லுாாி 140 வருடகாலமாக ஆங்கிலம் தமிழ், சிங்களம் மூன்று மொழிகளைக் கொண்டதொரு பாடசாலையாக தமது கல்வியை புகட்டி வருகின்றது. .  கொழும்பில் 140 வருட கால வரலாறு கொண்ட ஒரே ஒரு  முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக கைரியாக் மகளிா் கல்லாாி மட்டுமே இருக்கமுடியும் என நம்புகின்றேன். 

 இக் கல்லுாாியை உருவாக்கிய பல சாதனையாளா்கள், பெண் தலைவிகள் சிறந்து விளங்கியுள்ளா்ா்கள். இக் கல்லுாாியின் மாணவிகள்  மும் மொழிகளிலும் நாடடில் உள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும்  மருத்துவத்துறை, முகாமைத்துவம், சட்டம், கலைத்துறைகளுக்கு சென்று தமது உயா்கல்வியைத் தொடா்கின்றாா்கள். இதற்காக  சிறந்த சேவையாற்றிய சகல  ஆசிரியைகள்  சகல அதிபா்களுக்கும்  நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.  

இந்த நாட்டில் வாழும்  99 வீதமான மக்கள் சகல இனங்களுடன்  ஜககியத்துடனும் சகோதரத்துடனும் சமதானமாகவும் வாழ்ந்துவருகின்றனா்.. இந்த நாட்டில் உள்ள பெண்களின் பல்கலைக்கழக கல்வி வளா்ச்சி  61.5 வீதமாக அதிகரித்துள்ளது.  தற்பொழுது அரசியலைத் தவிர ஏனைய சகல துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனா். இதே போன்று முஸ்லிம் பெண்களும்  கல்வியில்  வளர்ச்சி கண்டு வருகின்றனா்.  . அமெரிக்காவில் கூட கடந்த ஆண்டு பல்கலைக்கழகம் செல்லும் பெண்கள் 58 வீதமாக வளா்ச்சிகண்டுள்ளது..  இதற்காக பெண்களது வளா்ச்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் ஆண்கள் தம்மாலான சகல ஒத்துழைப்பினையும் நல்க வேண்டும்.  கடந்த கொவிட் 19 காலத்தில் பல்வேறு வகையான தொற்றுக்கள் பறவியது  அதில் பல கஸ்டங்களையும் நாம் அனுபவித்தோம் இன்றும் அதிலிருந்து விடுபடவில்லை.  அதற்காக உலக நாடுகள் பல  மருத்துகளையும் வக்சினையும் கண்டுபிடிப்பிற்காக ள்  ஆராய்ச்சியில் இறங்கின. நாம் நமது குடும்பங்களை வேறாக்கி வாழ்ந்து வாழப் பழகிவிட்டோம்.  ஒவ்வொறு காலத்தின் மாற்றத்திற்காக நாம் நம்மை மாற்றிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.எனவும் அமைச்சா் அங்கு உரையாற்றினாா்.

No comments

Powered by Blogger.