Header Ads



பாடசாலை மாணவர்களுக்கு அரபு உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க விசேட வேலைத்திட்டம்


பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இணையவழி முறைமையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, கூட்டாக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில், நாடுமுழுவதுமுள்ள பாடசாலைகளின் அதிபர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


1 comment:

  1. நல்லதொரு திட்டம், மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். ஆனால் இதுவும் நிச்சியம் தேங்காய் விலையை வர்த்தமானி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கதையா என பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.