Header Ads



அதுகல்புர நுழைவாயிலில் முதல் மாதத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானம்


அதுகல்புர நுழைவாயிலில் முதல் மாதத்தில் 500,000 வாகனங்கள்   பயணம் செய்துள்ளதோடு 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் பெறப்பட்டுள்ளது -   ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) திறந்து வைக்கப்பட்ட முதல் மாதத்தில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

15-01-2022 அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான இந்தப் பகுதி நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 16-01-2022 அன்று மதியம் 12.00 மணிக்குப் பிறகு நெடுஞ்சாலையில் பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. 16.01.2022 முதல் 21-02-2022 வரையான காலப்பகுதியில் 510,670 வாகனங்கள் இவ்வீதியில் பயணித்துள்ளதாகவும் அந்த வாகனங்கள் மூலம் 100 மில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பிரிவில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாற்றங்கள் அமைந்துள்ளன.

ஊடக பிரிவு

நெடுஞ்சாலை அமைச்சு.

2 comments:

  1. வருமானம் வந்தா மிகவும் சந்தோசம்.... அதேபோல் மக்களுக்கு பலன்??????
    வராது......
    அந்த சிந்தனை இல்லை யாருக்கும்

    ReplyDelete
  2. நமது நாட்டு அரசு நமது மக்களிடம் "இலாபம் பெற்றோம்" எனக் கூறுவது நகைப்பானது. இலாபம் வெளி நாட்டவரிடம் அல்லது வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும

    ReplyDelete

Powered by Blogger.