Header Ads



இலங்கை மின்சார சபைக்கு, எரிபொருள் விநியோகிக்க முடியாது: கையை விரித்தது லங்கா IOC


 எரிபொருள் இன்மையால் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாது என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து 3000 தொன் எரிபொருள், இலங்கை மின்சார சபைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

வழங்கப்பட்ட 3000 தொன் எரிபொருள் இன்று (18) மாலை முடிவடையும் என அவர் கூறினார்.

இதற்கு மாற்று வழியாக லங்கா IOC நிறுவனத்திடம் எரிபொருள் விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேலதிக எரிபொருள் இன்மையால் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என அறிவிக்கப்பட்டதாகவும் மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலிலிருந்து இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் கூறினார்.

கையிருப்பிலுள்ள எரிபொருளுடன் கப்பலிலிருந்து எரிபொருள் கிடைக்குமானால், எவ்வித தடையுமின்றி மின்சார விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.