Header Ads



ரமழான் பரிசுமழை போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


AMYS நிறுவனம் மற்றும் Jaffna Muslim இணையத்தளம் ஆகியன இணைந்து நடாத்திய  2021ம் ஆண்டுக்கான ரமழான் பரிசுமழை போட்டி நிகழ்ச்சியில்  வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 26.01.2021 AMYS தலைமையகத்தில் நிறுவன பணிப்பாளர். அஷ்-ஷெய்க் M. S. M. தாஸீம்,  திட்டப்பணிப்பாளர் A . J. வாரித் போட்டிக்கான இணைப்பாளர் N. நிஷாத் ஆகியோரது பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. 

இப்போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசினை காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா மஹ்ரூப் பதூனும், 2

ம் பரிசினை அடுலுக்கமையைச் சேர்ந்த H. ஹம்தானும், 3 ம் பரிசினை இறக்காமத்தை சேர்ந்த I. ரஸீம் அவர்களும் பெற்றுக்கொண்டனர். 

அத்தோடு ஆறுதல் பரிசுகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடி மற்றும் தூர இடங்களில் இருந்து வருபவர்களின் நலன்கருதி ஆறுதல் பரிசில்கள் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.