Header Ads



ஜெய்­லானி பள்­ளி­வா­சலும் அத­ன் பகு­தி­களும் முஸ்லிம்களின் தொன்மைமிகு சட்டரீதியான தலங்களாகும், அதனை அகற்ற எவருக்கும் உத்தரவிட முடியாது


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள நெருக்­கடி நிலை­மையை அதன் நிர்­வாக சபை ஒத்­து­ழைத்தால் மாத்­தி­ரமே தீர்த்து வைக்க முடியும். சுமு­க­மான தீர்­வு­காண முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும், வக்பு சபையும் தயார் நிலையில் உள்­ளன.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபை ஒத்­து­ழைப்பு வழங்­கா­து­விடின் புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்கும் நிலைமை ஏற்­ப­டலாம் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு புதிய நிர்­வாக சபை அழைக்­கப்­பட்டும் நிர்­வாக சபையைச் சேர்ந்த மூவர் மாத்­தி­ரமே அதில் கலந்து கொண்­டார்கள். நிர்­வாக சபையை மீண்டும் அழைத்து கலந்­து­ரை­யாடி சுமுக தீர்வு காண்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஜெய்­லானி புனித தலம் வக்பு சட்­டத்­தின்கீழ் பதிவு செய்­யப்­பட்ட சட்­ட­ரீ­தி­யா­ன­தாகும். இந்­நி­லையில் இதனைப் பாது­காக்கும் பொறுப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம்,வக்பு சபை என்­ப­வற்­றுக்கு மாத்­தி­ர­மல்ல பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கும் முக்­கிய பொறுப்பு உள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை ஏகோ­பித்து இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். ஜெய்­லானி பள்­ளி­வா­சலும் அத­னோ­டி­ணைந்த பகு­தி­களும் முஸ்லிம்களின் தொன்மைமிகு புனித தலங்களாகும். சட்டரீதியானதாகும். அதனை அகற்றும்படி எவருக்கும் உத்தரவிட முடியாது என்றார்.- Vidivelli

3 comments:

  1. கலர் காட்ட முயற்சி செய்யும் எத்தனையோ அரச நிறுவனங்களை பெயில் சேர் பிராண்ட் அடித்துவிட்ட பென்சன் போன இந்த பெயில் சேர் பலாங்கொட சம்பவத்தில் பெயர் போட எத்தனிக்கின்றார். இவரின் அடுத்த பெயில் கைங்கரியத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. Why need a discussion if everything is legal. May Allaah curse those who want to remove the mosque.

    ReplyDelete
  3. මෙම ප්‍රකාශය ලංකාදීපට හා දිවෛයින පත්තරයට දෙන්න. උබේ කලුසම ගැලවී මැලේසියාවේ ගුවන් තොටුපලේ කොටි විසින් උඹට දුන් සම්මානය ආපසු හරියට මතක් කිරීමට ඹවුන් සලස්වයි.

    ReplyDelete

Powered by Blogger.